8 மில்லியன் ரூபா செலவில் வெங்காயச்சங்கம்….

இலங்கை அரசின் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் காணப்படும் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் 2017 இன் கீழ் நீர்வேலி தெற்கு  கரந்தன் வீதியில் அமைந்துள்ள வெங்காயச்சங்கம் என எல்லோராலும் அழைக்கப்படும் வலி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொதியிடல் நிலையம் 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

நீர்வேலி வடக்கு மோதிரக்கேணி வீதி புனரமைக்கப்படுகிறது

நீர்வேலி வடக்கு #மோதிரக்கேணி– செல்லக்கதிர்காம கோவில் 658 மீற்றர் நீளமான வீதி நீண்ட காலத்தின் பின்னர் வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைப்பு பணிகள் இடம்பெறுகிறது.

இவ்வீதி குன்றும் குழியுமாக கல்வீதியாக ஒடுங்கிய நிலையில் காணப்பட்டதுடன் பலமுறை வீதியை புனரமைக்குமாறு கோரப்பட்டது. இந்நிலையில் தற்போது இவ்வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெறுகிறது வீதியின் ஒடுங்கிய பகுதியில் இருந்த நிலையில் வீதியோரமாகவுள்ள குடியிருப்பாளர்களுடன் வலி.கிழக்கு பிரதேச தொழில்நுட்ப அதிகாரிகள்(TO) பேசி வேலிகள், மதில்கள் பின்நகர்த்தப்பட்டு அகன்ற வீதியாக புனரமைக்கப்படுகிறது.

இவ்வீதி புனரமைக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் – தம்பிஐயா பத்மநாதன் (பப்பு)

குருந்தடி வீதி நீர்வேலி தெற்கு நீர்வேலியை  வசிப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட தம்பிஐயா பத்மநாதன் (பப்பு) 14.03.2018 புதன்கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார். இவர் தயாவதியின் அன்புக்கணவரும் தனஞ்செயன் அனோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15.03.2018 நாளை வியாழக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும். ( தொடர்புகளிற்கு T.P 077 3422722 மனைவி 0767204678 ) மேலும் வாசிக்க

அத்தியார் இந்துவிற்கு வர்ணம்பூச இன்னொரு பழைய மாணவன்

அத்தியார் இந்துவிற்கு வர்ணம்பூச இன்னொரு பழைய மாணவன் உதவி செய்துள்ளார். அத்தியார் இந்துவின் பழைய மாணவனும் தற்போது இலண்டனில் வதிபவருமான திரு தனபாலசிங்கம் சரத்சந்திரன் அவர்கள் 100 000 ரூபா நிதியினை பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். தனது தந்தை அமரர் நல்லையா தனபாலசிங்கம் மற்றும் தனது தாயார் சுகுணா ஞாபகார்த்தமாக மேற்படி நிதியினை நீர்வேலி தெற்கில் வதியும் அவரது உறவினரான திருமதி ருக்குமணி ஆனந்தவேல் மூலமாக ஓரு இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார். நன்றியுடன் பாராட்டுக்கள் திரு சரத்சந்திரன் அவர்களே. மேலும் வாசிக்க

பாலர்பகல்விடுதி கண்காட்சி -படங்கள்

மேலும் வாசிக்க

பாலர்பகல்விடுதி- ஆக்கத்திறன் கண்காட்சி

நீர்வேலி தெற்கு  பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி (Exhibition) எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை மு.ப 9.00 மணியளவில் பாலர்பகல்விடுதி மண்டபத்தில் நிலையத்தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகைதந்திருக்கும் திருமதி செல்வமணி இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். அனைவரையும் வருகை தந்து பாலர்களின் ஆக்கங்களை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைப்பதாக பாலர்பகல்விடுதி முன்பள்ளிச் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.

தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்….

உலகெங்கும் பரந்து வாழும்  நீர்வேலி  உறவுகள் அனைவரினதும் கவனத்திற்கு !

எமது இணையத்தில் மரணஅறிவித்தல் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. ஆனால் எமது இணையத்தின் முயற்சியினால் மட்டுமே தகவல் சேகரிக்கப்பட்டு  மரண அறிவித்தல் வெளியிடப்பட்டு  வருகிறது. இதனால் சிலருடைய அறிவித்தல்கள் தவறவிடப்படுகின்றன. எனவே   உங்களது அறிந்தவர்கள் தெரிந்தவர்கள்  அல்லது  உறவினர்கள் யாராவது இறந்தால் உடனடியாக எமது ஈ மெயில் முகவரிக்கு அல்லது தொலைபேசிக்கு தெரியப்படுத்தினால் எந்தவிதமான காலதாமதமும் இன்றி  மரணஅறிவித்தல் வெளியிடப்படும்.

email id       flashnetsasi@gmail.com

phone no    0094  776621745