ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018 மிதுனம்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தில் வலம் வருவீர்கள். சில சிரமங்கள் ஏற்பட்டாலும் வெகு சாமர்த்தியமாக அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த நோய் நொடிகளும் குணமாகிவிடும். கைவிட்டுச் சென்ற வாய்ப்பும் திரும்ப கைக்கு கிடைத்துவிடும். வழக்கு விஷயங்கள் நூற்றுக்கு நூறு சாதகமாகும்.

தலை சுமை இறங்கிவிட்டது போன்ற உணர்வுகளைப் பெறுவீர்கள். சோம்பல் என்பது அறவே இராது. சுறுசுறுப்பாக செயல்பட்டு பழைய இழப்புகளை சரிகட்டி விடுவீர்கள். புதுவித தொழில் ஆகியவற்றை செய்வீர்கள். குடும்ப சகிதமாக புனித யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். மேலும் குடும்பத்தாருடன் வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் யோசிப்பீர்கள். நிதி நெருக்கடி ஏற்படாது காக்கப்படுவீர்கள்.
அவசியமில்லாத கவலைகள் மனதை விட்டு அகலும். உங்களின் சரியான அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக ஆக்குவீர்கள். வில் வளைந்தது போல் வளைந்த நீங்கள் அம்பு வேகமாய் பாய்ந்தது போன்று துரிதமாக செயல்களைச் செய்து அவைகளை சாதனையாக மாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து காரியமாற்றுவீர்கள். அதற்குண்டான பலன் சிறிது தாமதத்துடன் கிடைக்கும் என்றாலும் பொருளாதார நிலையில் தொய்வு ஏதும் உண்டாகாது. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க பலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பது அவசியம். கண், சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராகவே தொடரும். வீடு மாறும் எண்ணம் உள்ளவர்கள் மனம் விரும்பிய வீட்டுக்கு மாறிச் செல்வார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து வருமானம் வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு மனதிற்கு விருப்பமான இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்கமாட்டார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். வேலைகளை திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். சோம்பலுக்கு இடம் தரக்கூடாது.

வியாபாரிகள் கொக்குக்கு ஒன்றே  மதி என்கிற ரீதியில் வியாபாரத்தில் குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப்பேசி வியாபாரத்தை விரிவு படுத்தவும். பழைய கடன்களைப் படிப்படியாகத் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். போட்டிக்குத் தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவார்கள். மேலிடத்தின் கருணை பார்வைகளுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசலில் சிக்கி மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களிடம் நல்ல உறவை பேணுவீர்கள்.
பெண்மணிகளுக்கு புத்திசாலித்தனம் கூடும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். ஆடை அணிமணிகளை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பெற்றோர் உங்கள்விருப்பத்தை நிறைவேற்றுவர்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அநாவசிய சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கவும். உடல் நலம் பலப்பட தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

***…………………………………………………..

மேடம்

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். வாழ்க்கையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டி விடுவீர்கள். மனதிற்கினிய பயணங்களை செய்ய நேரிடும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அரசாங்கத்திலிருந்து திடீரென்று சலுகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அனைவரிடமும் சுமுகமாகப் பேசி பாகப்பிரிவினை உண்டாகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

எதிரும் புதிருமாக இருந்த உற்றார் உறவினர்கள் சுமுகமாகப் பேசி உங்களுடன் இணைவார்கள்.  நீண்ட நாள்களாக மூடி வைத்திருந்த தொழிலை புதுப்பித்து நடத்தத் தொடங்குவீர்கள். கானல் நீராகி போன விஷயங்கள் திடீரென்று கைகூடி விடும். உங்கள் செயல்களில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். இல்லத்தில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் திடீரென முடிவாகும். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு உண்டாகும். உங்கள் குறிக்கோள்களை திட சிந்தனையுடன் செயல்படுத்த முனைவீர்கள். அசையா சொத்து விஷயங்களில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும் இழப்புகளும் இந்த காலகட்டத்தில் தொடராது என்றால் மிகையாகாது.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக உயர்வீர்கள். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளும் காணப்படுவதால் வரவுக்கேற்ற செலவுகள் செய்வது சிறந்தது. மேலும் கடன் வாங்க நேரிடாது. நண்பர்களின் குறையை பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.

பேச்சிலும் உங்களின் அறிவு முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு தக்கபடி செயல்படுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகள் மூலமும் பெரிய வருமானத்தைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலில் இருந்த முடக்கங்கள் நீங்கி விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். பட்டும் படாமலும் பேசி வந்த நண்பர்கள் மனம் விட்டு பேசத் தொடங்கும் காலம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்து முடிப்பார்கள். சில சமயங்களில் காரணமில்லாமல் அதைரியப்படுவீர்கள். இந்நேரங்களில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். பணவரவுக்கு குறைவு வராது. தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்காமலேயே கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கேட்ட இடத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

போட்டியற்ற சந்தைகளைப் பார்ப்பீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடுசெய்வீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டிவரும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தைரியமும் ஆற்றலும் கூடும். எதையும் சமாளிப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும்.

உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிக்கொணரும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.

கணவருடன்அன்யோன்யம் கூடும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். மாணவர்கள் சாதனை புரியும் ஆண்டாகும். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும்.
வெளிவிளையாட்டுகளிலும் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.

………………………………………………………………………

கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிக்கனமாக  இருந்து சேமிப்பை கூட்டுவீர்கள். பெரிய செலவுகள் என்று எதுவும் வந்து கையை கடிக்காது. உடல் நலம் சீராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிணி லேசாக தோன்றி மறைந்துவிடும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். செய்தொழிலில் நல்ல சீர்திருத்தங்களை கொண்டு வருவீர்கள்.

அரசாங்க சட்டதிட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பீர்கள். நிறைய மனிதர்களச் சந்தித்து பிரபலமாவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் சிறிது தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சில நேரங்களில் குழப்பமான மனநிலை ஏற்படும். வழக்குகளில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. வெளியூர், வெளிநாட்டிலிருந்து இனிமையான தகவல்கள் உங்களைத் தேடிவரும். துணிந்து புதிய திட்டங்களில் ஈடுபட்டு பிரகாசமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பிரச்னைகள் அதிகம் இருக்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சகஜ நிலை உண்டாகும். பழைய கடன்களை திருப்பி அடைத்து விடுவீர்கள். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செய்தொழிலில் நிலைமைகள் மாறி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். உங்களை அவமதித்தவர்களை கௌரவமாக நடத்துவீர்கள்.

பங்கு மார்க்கெட் போன்ற துறைகளில் ஈடுபட்டு கணிசமான தொகைகளை ஈட்டுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் ஆற்றல் கூடும். தன்னம்பிக்கை வெளிப்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றல் உண்டாகும். உங்களின் மிடுக்கான தோற்றத்தால் நீங்களே பெருமைபட்டு கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்க வழியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நெடுங்காலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயம் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டு குறித்த காலத்திற்குள் செய்து முடிப்பார்கள். உங்கள் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடமும் சுமுகமான உறவுநிலை தொடரும். சக ஊழியர்களுக்கு ஒரு தலைவர் போல் நீங்கள் காட்சி அளிப்பீர்கள். அலுவலகத்தில் உயர் பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு முயற்சிக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். அனைத்துச் செயல்களும் தடைகளுக்குப்பிறகே வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தினாலும் பெரிய கடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகள் நூதன யுக்திகளைக் கையாண்டு விவசாயத்தைப் பெருக்குவார்கள். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்குமளவிற்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்கள் உற்சாகப்படுத்தும்.

கலைத்துறையினர் தேவைக்கேற்ற வருமானத்தைக் காண்பார்கள்.  புதிய கலைஞர்களின் நட்பு கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் ஆண்டாக இது அமைகிறது. பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். சுற்றுலா சென்று மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். குழந்தைகளாலும் சந்தோஷம் நிறையும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் கூடும். முயற்சிகள் யாவும் தாமதமின்றி நிறைவேறும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

…………………………………………………………………………….

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். புதிய சேமிப்பு திட்டங்களில் சேர்வீர்கள். உடல் சோர்விக்கும் சோம்பேறித்தனத்துக்கும் விடை கொடுப்பீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம் கண்டு கொள்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள்.  அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் உங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டீர்கள்.

அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்துகொள்ள மாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் தூர பயணங்களையும் செய்ய நேரிடும். உங்கள் முயற்சிகளில் இருந்த இடற்பாடுகள் நீங்கி தைரியத்துடன் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் அவசியமான சுபகாரியங்களை உடனடியாக முடிப்பதற்கு புதிய கடன் வாங்க நேரிடும். குடும்ப சொத்துகளை அடமானம் கொடுக்க வேண்டிய நிலைமை எதுவும் ஏற்படாது. அரைகுறையாக விடப்பட்ட கட்டடப் பணிகள் மீண்டும் தொடரப்பட்டு அது நல்ல விதத்தில் முடிக்கப்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றியைத் தேடி தரும். உங்கள் தர்ம
சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தின் ஒரு பகுதியை ஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்வீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உழைப்பும் வீண் போகாது. உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தாய்வழி உறவுகளிலிருந்த மனச் சஞ்சலங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும் உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும்.

அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் சுலபமான முயற்சியில் நிறைவான வெற்றி வாய்ப்புகள் கூடிவரும். மனதில் பளு இன்றி உற்சாகமாக சஞ்சரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் சிறப்பாக முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளும் உதவிகரமாக இருப்பதால் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.  சிலர் விரும்பிய இடமாற்றங்களைக் காண்பார்கள். விரும்பிய பதவி  உயர்வு உங்களைத் தேடி வரும். உழைப்பிற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியையும் காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் தோன்றும். மேலும் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் பயிர்விளைச்சலில் ஆதாயங்களைப் பெறுவார்கள். தங்களுக்குகீழே வேலை செய்பவர்களால் நன்மையை அடைவார்கள். சக விவசாயிகள் மத்தியில் செய்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். குடும்பத்தில சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகளையும் அடைக்கும் அளவிற்கு பொருளாதார வசதிகள் மேம்படும்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன்  அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப் படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள் கலைத்துறையினர் பாராமுகத்தை பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடலையும் மனதையும் சிறப்பாக வைத்திட பிராணாயாமம் யோகா போன்றவைகளைச் செய்யவும். ரசிகர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டாம். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து அவர்களது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வீர்கள். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நீங்களே  செய்து கொள்ள முயலுங்கள். அதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

………………………………………………………………………….

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராகவே தொடரும் என்றாலும் பேராசைக்கு இடம் தராமல் பணியாற்ற வேண்டும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளும் அவர்கள் தீட்டும் சதித்திட்டங்களும் உங்களை கலக்கமுற செய்யும். அதோடு நன்கு யோசித்த பிறகே மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும்.

மற்றபடி பெரிய கடன்களில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவீர்கள். நெடுங்காலமாக தொந்தரவு கொடுத்து வந்த உடற்கோளாறுகள் தீர்ந்து உடல்நலம் மேம்பாடு அடையும். சோம்பல் அறவே நீங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் சிறப்பான கௌரவம் அந்தஸ்தும் கிடைக்கும். செய்தொழிலில் புதிய உத்வேகத்துடன் இறங்குவீர்கள். உடன்பிறந்தோர் மூலம் தேவையான ஆதரவைப் பெறுவீர்கள். விஷயங்களைப் புரிந்து கொண்டு சரியான வார்த்தைகளை பயன்படுத்துவீர்கள்.  இல்லத்தில் திருமணம் போன்ற சுய காரியங்களும் குழந்தைப்பேறும் உண்டாகும். பூர்வீக வழி சொத்துகள் சிரமமில்லாமல் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அவசர புத்தியினால் சிறிய தவறுகளைச் செய்தாலும் கடைசி நேரத்தில் அவைகளிடமிருந்து விலகி விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் தானாகவே விலகி விடும், ஓய்வில்லாமல் காரியமாற்றிக்கொண்டே இருப்பீர்கள். செய்தொழிலில் அனுதினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். ஆபத்துகளை சூட்சும புத்தியால் கண்டறிந்து அதைக் கடந்து வந்து விடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும் நடையில் கம்பீரமும் உண்டாகும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை வரிசைப்படுத்தி காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணவரவு குறித்த நேரத்தில் கைவந்து சேரும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவது நன்மை தரும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு பொருள்களின் விலையை நிர்ணயித்து லாபங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். புதிய கால்நடைகளை வாங்கிப் பயனடைவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்தும் ஆண்டாக இது அமையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் . வழக்குகள் முடிய தாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயரும் புகழும் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். புதுத்தெம்புடன் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டிவரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் உறவு நன்றாக இருக்கும். உற்றமும் சுற்றமும் அனுகூலமாக இருப்பார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். தாய் வீட்டுச் சீதனமும் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது.

மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பெற்றோர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விளையாட்டில் புதியவைகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

***

……………………………………………………………………………………

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நிறையும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  சுப நிகழ்ச்சிகள் தானாகவே நடந்தேறி விடும். வெளிவட்டாரத் தொடர்பினால் உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும்.

உங்கள் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் மறைந்துவிடும். அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளவர்களிடம் தொடர்பு உண்டாகும். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மேன்மை அடைவீர்கள். ஏமாற்றங்கள் மறைந்து ஒரு சிறப்பான மாற்றத்தை எதிர்நோக்கி பயணப்படுவீர்கள். கடினமான சூழ்நிலைகளிலும் அவசரப்படாமல் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பீர்கள்.

பூர்வீக வழியில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். வரவே வராது எனறு நினைத்திருந்த கடன்கள் கைவந்து சேரும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு, வெளியூர்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் வாய்ப்புகளும் உண்டாகும். பழைய வண்டி, வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். மார்பு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் ஆளாவீர்கள். அதனால் கவனமாக இருக்கவும். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்து கொண்டு அவர்களின் உறவை நல்ல முறையில் தக்கவைத்துக் கொள்ளவும்.

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் சிறகடித்து பறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க காண்பீர்கள்.  உங்கள் மனவருத்தங்களை வெளிகாட்டாமல் வலம் வருவீர்கள். சுதந்திரமாக சிந்தித்து தனித்து செயல்படுவீர்கள். நேர்முக எதிரிகள் திடீரென்று விலகி விடுவார்கள். புதிய உறவுகள் மலர காண்பீர்கள். அவர்கள் உங்கள் செயலுக்கு அரணாக இருப்பார்கள். சிலர் புதிய திட்டங்களை செயலாக்குவீர்கள். வருமானம் சிறக்கும் என்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் செயல்படுவீர்கள். எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியிலிருந்தும் சில அனுகூலங்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்கள் பெறுவார்கள். உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் உண்டாகுமாகையால் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து அவர்களின் பிரச்னைகளை வளர விடாதீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரையும் எடுப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச்செல்லவும். புதிய சந்தைகளை நாடிச் செலவும் போது அதிக கவனம் எடுக்கவும். மேலும் அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். கொள்முதலிலும் அதிக லாபங்களைக் காண்பீர்கள். பொருள் வரவு சிறப்பாக இருக்குமாகையால் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினருக்கு மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் நெடுநாளைய கனவு பலிக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமைகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு குழப்பமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

 

0 Comments