www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

வசதி குறைந்த 20 மாணவர்களுக்கு சப்பாத்து வழங்குமாறு கோரிக்கை


கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தினைச் சேர்ந்த 20 வசதி குறைந்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக 20 காலணிகளை (சப்பாத்து) பெற்றுத்தருமாறு எமது இணையத்திடம் பாடசாலை நிர்வாகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையைச் சேர்ந்த வசதிகுறைந்த 40 மாணவர்களுக்கு பயிற்சிக் கொப்பிகளை பெற்றுத்தருமாறும் பாடசாலை அதிபரினால் கேட்கப்பட்டுள்ளது. உதவ விருப்பமுள்ளவர்கள் எம் முடன் அல்லது பாடசாலை நிர்வாகத்திடம் தொடர்புகொள்ளவும்.

0 Comments