அத்தியார் இந்துக்கல்லூரிக்கும் வர்ணம் பூசலாமா ?

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் தங்களுடைய கட்டிடங்களுக்கு கவர்ச்சியானதும் அழகானதுமான  வர்ணங்களை தீட்டி வருகின்றன. இதனால் அப்பாடசாலைகள் மிகவும் அழகாகவும் மாணவர்களை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது. ஆனால் அத்தியார் இந்துக்கல்லூரி பல தசாப்தகாலங்களாக காவி வர்ணத்தில்  அப்படியே காணப்படுகின்றது. ஒவ்வொரு பழைய மாணவரும் அல்லது   குடும்பமாக இணைந்து  ஓவ்வொரு கட்டிடத்தினையும் பொறுப்பேற்று வர்ணம் தீட்ட முடியும். ஏற்கனவே உதவி புரிந்த பழைய மாணவர்கள் இதில் இணையத்தேவையில்லை.  பழைய மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையின்பால் இணைந்தால் எங்கள் ஊரின் தாய்ப்பாடசாலையான  அத்தியார் இந்துக்கல்லூரியை  புதிய தோற்றத்தில் பார்க்கலாம். இல்லையேல் இருந்தது போல தொடர்ந்தும் காணப்படும்.     இது எமது இணையத்தின் கருத்தாகும்.

பாடசாலை அலுவலக  தொலைத்தொடர்பு இல 021  223 0499

மேலும் வாசிக்க

அத்தியார் இந்துக்கல்லூரி- நன்றி நவிலல்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்டையில் பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நீர்வேலி தெற்கை சேர்ந்த திரு.நடராஜா ஸ்ரீரங்கன் தனது தந்தையார் அமரர் சி.நடராஜா ஞாபகார்த்தமாக தனது உறவினரான அத்தியார் இந்துவின் முன்னாள் உபஅதிபர் திரு.ஐ.சிவராஜா அவர்கள் மூலம் பாடசாலை அதிபரிடம் 150 000 ரூபா பெறுமதியான 20 ஒலிபெருக்கிகளும் 25.01.2018    அன்று  கையளிக்கப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது அதன் வேலைகள் யாவும் நிறைவடைந்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலை முடிவடையும் நேரத்தில் ஒலிபரப்பப்படும் பாடசாலைக்கீதம்  தினசரி பொது அறிவு ஒலிபரப்பல்  மற்றும் வசேட அறிவிப்புக்கள் என்பன மேற்படி ஒலிபரப்பினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதயம் கனிந்த நன்றிகள் ஸ்ரீரங்கன் அவர்களே. மேலும் வாசிக்க

நீர்வேலி குறுக்கு வீதி காமாட்சியம்பாள் அலங்கார உற்சவம்

மேலும் வாசிக்க

நீர்வேலி குறுக்கு வீதி காமாட்சியம்பாள் உற்சவம்

மேலும் வாசிக்க

நீர்வேலி தெற்கு ஞானவைரவர் உற்சவம் (வரதன் கடை அருகில்)

மேலும் வாசிக்க

சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து நம்ம வாயிலேயே..

108 வியாதிகளுக்கும் ஒரே மருந்து….அதுவே,
உமீழ் நீர், உயிர் நீர் !
சர்க்கரை நோய்க்கான எளிய,  இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே இருக்கு !
உமிழ் நீராக இருக்கு !
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம் ?
உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது !
உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை, நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,
அதிக அளவு எடுத்துக் கொண்டனர் !

மேலும் வாசிக்க

வர்ணம் பூசலாமா ? என்ற செய்தி – பழையமாணவன் முன்வந்தார்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு வர்ணம் பூசலாமா ? என எமது இணையத்தில் வந்த செய்தியின் காரணமாக பழைய மாணவன் ஒருவர் முன்வந்துள்ளார். கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் காண்டீபன் அவர்கள் மறைந்த தனது தந்தை சுப்பிரமணியம் இராஜேஸ்வரன் ஞாபகார்த்தமாக பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவினை பாடசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளார். நன்றியுடன் பாராட்டுகின்றோம் காண்டீபன் அவர்களே… மேலும் வாசிக்க