கரந்தன் இராமுப்பிள்ளைக்கு இன்னொரு கணனி

எண்பதாயிரம் ரூபா பெறுமதியான கணனி ஒன்றினை 1996 ஆம் ஆண்டு கரந்தன் இராமுப்பிள்ளையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பழைய மாணவர்கள் 4 பேர் இணைந்து வாங்கி அன்பளிப்புச் செய்துள்ளனர்.தயாளன் தயாசுகாலன் 40 000,துரைசிங்கம் குகப்பிரியா 20 000,பொன்னுத்துரை கஜதீபன் 15000,பொன்னம்பலம் நிசாந்தன் 5000 .ஆகிய பழைய மாணவர்களே இந்த மேசைக்கணனியினை அன்பளிப்புச் செய்துள்ளனர்.இது கரந்தன் இராமுப்பிள்ளைக்கு கிடைத்த 5 ஆவது கணனியாகும்.முதலாவது கணனியினை நேர்வேயில் வதியும் திரு புண்ணியமூர்த்தி புதிய மேசைக்கணனி ஒன்றினையும் இலண்டனில் வதியும் திருவாசகம் அவர்கள்  பழைய கணனிகள் மூன்றினையும் ஏற்கனவே வழங்கியிருந்தனர்.தற்போது கணனியகத்தில் 5 கணனிகள் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் காணப்படுகின்றது. கணனிகளை வழங்கிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும் மேலும் வாசிக்க

கரந்தன் இராமுப்பிள்ளையில் பரிசளிப்பு விழா

எதிர்வரும் 03.11.2018 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி  சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில். பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனரின் செயலாளர்  திரு  இ. இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வலையக்கல்விப்பணிமனையின் பாலராஜ் அவர்களும் பழைய மாணவன் திவாகரன் அவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வினை சிறப்பிக்க அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் தீப பூஜை

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலுயத்தில் தீப பூஜை 24.10.2018 புதன்கிழமை நடைபெற்றது.(படங்கள் சிந்துக்கேய சர்மா) மேலும் வாசிக்க

13.11.2018 நீர்வைக்கந்தனில் சூரன் போர் உற்சவம்

நீர்வைக்கந்தனில் 13.11.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு சூரன் போர் உற்சவம் நடைபெறும். மேலும் வாசிக்க

சீ.சீ.த.க பாடசாலையில் நடைபெற்ற வாணி விழா

மேலும் வாசிக்க

நீர்வேலி மேற்கு மாலைவைரவர் கோவில் வாழைவெட்டு

மேலும் வாசிக்க

கேதார கௌரி விரதம் ஆரம்பம்!

சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பது இவ்விரதத்தின் சிறப்பு. இத்தகைய சிறப்பு பெற்ற “கேதார கெளரி விரதம்  குறித்து ஒரு புராண வரலாறு உண்டு.

கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் பார்வதி  சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய ரம்பையானவள் அற்புதமான நடன விசேஷங்களை நடித்துக் காட்டுகிறாள். மேலும் வாசிக்க