அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு

அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்கள் 16.10.2015 அன்றில் இருந்து செயற்படும் படியாக அதிபர் சேவை தரம் 1 க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். வடமாகாணத்தில் 17 அதிபர்கள் அதிபர் சேவை தரம் 1 க்கு உயர்வு பெற்றுள்ளனர். அதில் அத்தியார் அதிபரும் ஒருவர் ஆவார்.  இதற்கான அறிவிப்புக்கள் அரசாங்க இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அலரி மாளிகையில் வைத்து  உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படவுள்ளது. தாங்கள் மேலும் உயர்வுகள் பெற்று எங்கள் கிராமத்தின் தாய்ப்பாடசாலை அத்தியார் இந்துக்கல்லூரியினை வளர்க்க வேண்டும் என நீர்வேலி கிராமத்து மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். மேலும் வாசிக்க

மிகச்சிறப்பாக இயங்கி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா

நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் கடந்த இருபது ஆண்டுகளிற்கு மேலாக மிகச்சிறப்பாகவும் திறமையாகவும் இயங்கி வருகின்றது. ஒரு வருடத்தில் மழலைகளுக்கான    மொழிப்பரீட்சைகள் கோடைகால கடற்கரைக் கொண்டாட்டம் வசந்தகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் அத்துடன் மிகப்பெரிய விழாவான வாழையடி வாழை என பல நிகழ்வுகளை நடாத்தி கனடா வாழ்  நீர்வேலி மக்களை ஒருங்கிணைக்கும் உன்னத பணியை ஆற்றி வருகின்றது. ஜனநாயக ரீதியில் குறுகிய காலத்தில் பொதுக்கூட்டங்களை நடாத்தி புதிய நிர்வாகங்கள் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கி மிகச்சிறப்பாகவும் திறமையாகவும் இயக்கிவரும் நிர்வாகத்தினருக்கு எமது இணையம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. அதற்கு மேலாக ஆலோசனை  சபை அமைக்கப்பட்டு  அவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியுடனேயே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடும்பம் வேலை நெருக்கடி என இருக்கும் எம்மவரிடையே எல்லோருடனும் தொடர்பு கொண்டு அனைவரையும்  ஒருங்கிணைத்து ஒரு நிகழ்வினை வெளிநாட்டில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பது என்பது ஒரு சாதாரண விடயமன்று. அந்தவகையில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் தலைவர் திரு.ப.ஜெகன் அவர்களையும் நிர்வாகத்தினர்களையும் ஆலோசனை சபையினரையும் நீர்வேலி மக்கள் சார்பாக பாராட்டபட வேண்டியவர்கள். வாழ்த்துக்கள் திரு ப.ஜெகன் அவர்களே. தொடரட்டும் உங்கள் அனைவரினதும் உன்னதபணிகள். மேலும் வாசிக்க

நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா காணொளி

 2018 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் நீர்வைக்கந்தனில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகளை தொகுத்து திருத்தம் செய்து புதிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அனுசரனையினை கனடாவில் வதியும் திரு.ம.மதன் அவர்கள் செய்துள்ளார். 18.08.218 சனிக்கிழமை கனடாவில் மோர்னிங் சைட் புங்காவில் நடைபெறவுள்ள ஒன்று கூடலின் போது DVD களை இலவசமாக விநியோகிக்கவுள்ளது. DVD பெற விரும்புவோர் திரு.மதன் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். youtube இல் காண விரும்புவர்கள் கீழ்வரும் இணைப்பினை அழுத்துக.

                                                                                            Click here for neervaikkanthan ther

மேலும் வாசிக்க

அத்தியார் இந்துக்கல்லூரி – கிரிகெட் ஆடைக்காக உதவி

அத்தியார் இந்துக்கல்லூரியின் கிரிகெட் விளையாட்டுத் துறையினை விருத்தி செய்யும் நோக்கில் 63 000 ரூபா நிதியினை கனடாவில் வதியும் பழைய மாணவன் திரு.பொன்னுத்துரை இராஜேந்திரன் அவர்கள் அன்பளிப்புச்  செய்துள்ளார். கிரிகெட் ஆடை மற்றும் சப்பாத்து தொப்பி என்பன ஒரு மாணவருக்கு கிடைக்கும் படியாக 15 பேருக்குரிய உடைத்தொகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியனை வழங்கிய பழைய மாணவர் திரு.பொன்னுத்துரை இராஜேந்திரன் அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக  நன்றிகள்  மேலும் வாசிக்க

கனடா சங்கத்தினரின் 20 ஆவது வசந்தகால ஒன்றுகூடல்

   நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் வருடந்தோறும் ஆவணி மாதம் வசந்தகால ஒன்றுகூடல் நிகழ்வும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வினை கனடாவில் உள்ள மேர்னிங் சைட் புங்காவில் நடாத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டும் 18.08.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அதேயிடத்தில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் தலைவர் திரு.பா.ஜெகன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. கனடாவில் வாழும் நீர்வேலி உறவுகள் அனைவரையும் தவறாது இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து அனைவருடனும் இணைந்து சுகம் பகிர்ந்து உணவருந்தி மகிழ்வடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் சிறுவர்கள் பெரியவர்கள் வயது வந்தவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டுப் போட்டிகளும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வசித்த அமரர் இராஜேஸ்வரன் அவர்களுடைய பெயர் விளையாட்டுத்திடலுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

பாலர்பகல்விடுதிக்கு 1,05 000/= அன்பளிப்பு

நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் எமது பாலர்பகல்விடுதியும் முன்பள்ளிக்கும் ரூபா ஒருலட்சத்து ஐயாயிரத்தை(1,05000/=) அன்பளிப்பாக வழங்கியமைக்காக பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் சமூகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

கரந்தன் பாடசாலைக்கு முதலாவது கணனி கிடைத்தது…

 எமது இணையத்தில் வெளியான செய்தியினை அடிப்படையாகக் கொண்டு நோர்வே  நாட்டில் வதியும் நீர்வேலி தெற்கு  குருந்தடி வீதியினைச் சேர்ந்த திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி (பாபு) அவர்கள் 75 000 ரூபா பெறுமதியான மேசைக்கணனி ஒன்றினை 10.08.2018 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களிடம் கையளித்தார். நன்றியுடன் பாராட்டுகின்றோம் திரு பாபு அவர்களே…..
மேலும் வாசிக்க