அத்தியார் இந்துவில் நடைபெற்ற பொங்கல்விழா

மேலும் வாசிக்க

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் அன்பளிப்பு……

நீர்வேலி தெற்கு பகல்விடுதிக்கு  சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் அவர்களால் 14.02.2018  அன்று    வழங்கி வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நிழற்பபடங்கள். மேலும் வாசிக்க

நீர்வேலி தெற்கு வட்டாரத்தில் கூட்டமைப்பு வெற்றி

10.02.2018  இல் நடைபெற்ற பிரதேசசபைக்கான தேர்தலில் நீர்வேலி தெற்கில் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட திரு.க.தர்மலிங்கம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.  வாழ்த்துக்கள் திரு.தர்மலிங்கம் அவர்களே…

ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர்…….

IMG_3296ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் , ஆசிரியர் என்பவர்  என்ன செய்யவேண்டும் மாணவர்களுடன் எவ்வாறு உறவைப் பேணவேண்டும் , சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டும்  என எல்லோருடைய மனதிலும் உயர்ந்த இடத்தில் குடியிருக்கும் எங்கள் ஆசானைப்பற்றி நான் கூறவேண்டிதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் தனது பாடத்தில் எவ்வாறு பூரண அறிவுடன் இருக்கவேண்டும் என்பதற்கும் அவரே சிறந்த உதாரணமானவர். ஆங்கிலத்தின் மீது  அவர் கொண்டிருந்த அளவுகடந்த பற்றினால் பல்லாயிரம் மாணவர்கள் ஆங்கிலபாடத்தில் சிறப்புப்பெற்றனர். தூய்மையான பளீச்சென்று தெரியும் வெள்ளை வேட்டியுடனும் நஸனலுடன் சால்வையுமாக கம்பீரமாக தோன்றுவார்.  வகுப்பறைக்குள் எங்கள் ஆசான் வந்துவிட்டால் எங்களுக்கு பொது அறிவுத்தகவலுக்கு பஞ்சமே இருக்காது. ஒரு சாதாரண வகுப்பறையில் ஆசிரியன் ஒருவன் முப்பது மாணவர்களுடன் படும் பாட்டினை சொல்லமுடியாது.  அவ்வாறான மாணவர்களுடன் திண்டாடும் பல ஆசிரியரை கண்டிருக்கிறேன். மேலும் வாசிக்க

நீர்வேலிக்கிராமத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி

10.02.2018 இன்று நடைபெற்ற பிரதேசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.நீர்வேலி தெற்கில் திரு.க.தர்மலிங்கம் அவர்களும் நீர்வேலி வடக்கில் திரு.செல்வம் அவர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக. மேலும் வாசிக்க

வானில் இருந்து -அத்தியார் இந்துக்கல்லூரி


மேலும் வாசிக்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018 மிதுனம்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2018 -ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் ஒரு பாதுகாப்பு வளையத்தில் வலம் வருவீர்கள். சில சிரமங்கள் ஏற்பட்டாலும் வெகு சாமர்த்தியமாக அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த நோய் நொடிகளும் குணமாகிவிடும். கைவிட்டுச் சென்ற வாய்ப்பும் திரும்ப கைக்கு கிடைத்துவிடும். வழக்கு விஷயங்கள் நூற்றுக்கு நூறு சாதகமாகும்.

தலை சுமை இறங்கிவிட்டது போன்ற உணர்வுகளைப் பெறுவீர்கள். சோம்பல் என்பது அறவே இராது. சுறுசுறுப்பாக செயல்பட்டு பழைய இழப்புகளை சரிகட்டி விடுவீர்கள். புதுவித தொழில் ஆகியவற்றை செய்வீர்கள். குடும்ப சகிதமாக புனித யாத்திரைக்குச் சென்று வருவீர்கள். மேலும் குடும்பத்தாருடன் வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் யோசிப்பீர்கள். நிதி நெருக்கடி ஏற்படாது காக்கப்படுவீர்கள்.
அவசியமில்லாத கவலைகள் மனதை விட்டு அகலும். உங்களின் சரியான அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக ஆக்குவீர்கள். வில் வளைந்தது போல் வளைந்த நீங்கள் அம்பு வேகமாய் பாய்ந்தது போன்று துரிதமாக செயல்களைச் செய்து அவைகளை சாதனையாக மாற்றிவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  மேலும் வாசிக்க