அகவை 3 வாழ்த்துமடல்-நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா
எமது மண்ணின் பெருமை பேசும் எங்கள் இணையம் newneervely.com ஆரம்பித்து மூன்றாண்டுகளை பூர்த்தி செய்து நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த மகிழ்சிகரமான மூன்றாண்டு பூர்த்தியினை கொண்டாடும் வேளையில் நீர்வேலி நலன்புரி சங்கம்- கனடாவும் செம்மண்ணின் நலன்விரும்பிகளும் மிக்கமகிழ்ச்சி அடைவதுடன் எமது இனிய நல்வாழ்த்துக்களையும் newneervely.com இணையத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.எமது இந்த இணையம் ஆரம்பித்த நாளில் இருந்து முக்கியமாக நீர்வேலியின் செய்திகளை உடனுக்குடன் உலகிற்கு எடுத்து வருவதுடன், வெளிநாட்டு செய்திகளையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறது.மேலும் நீர்வேலியின் பாடசாலைகள், கோவில்கள், சனசமூக நிலையங்கள், மற்றும் பொது விடயங்களில் ஆக்கபூர்வமான செய்திகளையும் முன்னேற்றமான கருத்துகளையும் எடுத்து வருவதில் இணையத்தின் இயக்குனர் குழு நண்பர்கள் மிகச்சிறந்த பங்காற்றி வருகின்றனர். இவர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது போற்றுதற்குரியது.
மண்ணின் நினைவுகளுடனும் வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் தரும் உங்கள் தொண்டினை போற்றுவதுடன் எமது மனம் நிறைந்த நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் www.newneervely.com மேன்மேலும் வளர்ந்து பல்லாண்டு காலம் நீர்வேலியின் புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என வாழ்த்துவதுடன் இணையத்தின் இயக்குனர் குழு நல்வாழ்வுக்காகவும்,அவர்களது இனிய இணையத்தொண்டு மென்மேலும் ஓங்கவும் எமது காவல் தெய்வங்களை பிராத்திக்கின்றோம்.
தங்கள் தொண்டு என்றென்றும் நிலைத்து வளர எமது ஆதரவையும் அன்பையும் வழங்க கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் தெருவித்துக்கொள்கிறோம்.
வாழ்க!
நன்றி
தி. ஸ்ரீநாதன்
நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா
0 Comments