10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அச்செழு நீர்வேலி குறுக்கு வீதி காப்பெற் வீதியாக்கும் நிகழ்வு

அச்செழு நீர்வேலி குறுக்கு வீதியில் அச்செழு பிரதான நாட்சந்தியில் இருந்து கரந்தன் ஞானவைரவர் வீதியை இணைக்கின்ற 2km நீளத்தினைக்கொண்டுள்ள வீதியானது #100000Km காபெட் இடும் திட்டத்தில் #கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் #யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு காபெட் இடப்படவுள்ளது இதற்கான அடிக்கல் நாட்டுவைபவம் 29.11.2020 அன்று இடம்பெற்றது இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் தந்தையார் சதாசிவம் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு இவ்வீதிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கோப்பாய்தொகுதி இணைபாளர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கிராமவாழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

0 Comments

Leave A Reply