10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அதிபர் கா.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு மணிவிழா

Captureகோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் திரு. வே.கா. கணபதிப்பிள்ளை அவர்களின் மணிவிழா எதிர்வரும் 16.08.2014 காலை 9 மணிக்கு கலாசாலையில் இடம்பெறவுள்ளது. இவர் நீண்டகாலமாக நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து சேவையாற்றி பாடசாலையில் அந்தக்காலங்களில் இல்லமெய்வல்லுநர் போட்டிகளை சிறப்பாக நடாத்தினார். மாகாணம் தேசிய மட்டம் என மாணவர்களை வழிப்படுத்தி அனுப்பியவர். தற்போது கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அதிபராக இருந்து தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறும் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எமது இணையமும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

unnamed12

3

0 Comments

Leave A Reply