10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியாரில் -நிறுவுநர் தினமும் பிரிசில்தினமும்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பாடசாலையில் கொண்டாடப்படவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து பரிசில் தினமும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலையின் முதல்வர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் மேற்படி இரு நிகழ்விலும் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.செல்வரத்தினம் சந்திரராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக நீர்வேலி அத்தியார் இந்துவின் பழைய மாணவனும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர்  திரு.பொன்னுத்துரை சற்குணநாதன் அவர்களும் பிரபல அரசியல்பிரமுகரும் பழையமாணவனுமாகிய பொ.சிவசுப்பிரமணியம் அவர்களும்  கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

0 Comments

Leave A Reply