10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் மதிலுக்கு வர்ணம் பூசப்பட்டது

ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின்பு பாடசாலைக்கு வர்ணம் தீட்டுவதற்கு கிடைத்த இரண்டு இலட்சம் ரூபா நிதி தற்போது தான் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவில் வசித்து வரும் இராஜேஸ்வரன் காண்டீபன் அவர்களும் இலண்டனில் வசித்துவரும் திரு.தனபாலசிங்கம் சரத்சந்திரன் அவர்களும் தலா ஒரு இலட்சம் ரூபாவினை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தனர். 22.09.2019 அன்று நடைபெற்ற பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்காக பாடசாலையின் சமூகத்தினால் 160 000 ரூபா பெறுமதியான வர்ண வேலைகள் பாடசாலையின் முகப்பு மதிலுக்கு செய்யப்பட்டுள்ளது. மீதி பணம் 40 000 ரூபா கையிருப்பில் இருப்பதாக பாடசாலை அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பழைய மாணவர்கள் பாடசாலை முழுவதும் வர்ணம் தீட்டுவதற்கு முன்வந்திருந்தனர்.  சில நல்ல உள்ளம் படைத்தவர்களின் திட்டமிடப்பட்ட வதந்திகளினால் அவர்கள் பின்வாங்கியிருந்தனர். பாடசாலை நிர்வாகமும் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்துவிட்டனர். அவ்வாறு அவர்கள் செய்யாது இருந்திருந்தால் இன்று புதிய தோற்றத்தில் பாடசாலை காட்சியளித்திருக்கும். இது எங்கள் ஊரின் தாய் பாடசாலை. ஊரின் அடையாளமும் இப்பாடசாலையே. வீண் வததந்திகளை பரப்பியவர்களுக்கும் அதனை செவிசாய்த்தவர்களுக்கும் இச் செய்தி சமர்ப்பணம்.


0 Comments