10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]அத்தியாரில் O/L பெறுபேறு ஒரு சாதனை…….[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியானது 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையில் 61 சதவீதமான சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கிடைத்த உயர்ந்த பெறுபேறுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இந்த முறை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் அமைந்துள்ளன. பரீட்சைக்குத் தோற்றிய 83 மாணவர்களில் 50 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர். எஞ்சிய 33 மாணவர்களில் கணித பாடம் இன்றி நிபந்தனையுடன்  உயரதரம் கற்பதற்கு பல மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஒவ்வொரு பாடத்திலும் திருப்திகரமான அடைவுகளையும்  மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். விஞ்ஞானம் 56 சதவீதம் கணிதம் 60 சதவீதம்  ICT(கணனி) 90% தமிழ் 78  சதவீதம் என முக்கிய பாடங்களில் கூடிய அடைவுகள் பெறப்பட்டுள்ளன.  அயல் ஊரில் உள்ள பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது அத்தியார் இந்துக்கல்லூரி கூடிய அளவு முன்னணியில் உள்ளது.  இதற்காக கடுமையாக  உழைத்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டுவோமாக……(www.attiar.com)

லோ.நிலானி (6A, 1B, 2S)
வி.கீர்த்திகன் (5A, 3B, 1C )
த. சரணியா (5A, 3B, 1S )
த.திருக்குமரன் ( 5A, 3B,1S )
கோ.நிவேதிகா ( 5A, 2C, 2S )
க.டக்சயன் ( 4A, 3B,1c,1S)
ரா.நிசாங்கன் ( 4A, 2B, 2C,1S)
ம.கார்த்திகன் (4A, 2B, 2C )
ஸ்ரீ.தர்சனா ( 4A, 1B, 2C, 1S )
சி.பிரியங்கா ( 3A, 4B, C,S )
ஸ்ரீ.யதுர்சன் ( 3A, 2B, 2C, 2S)
பா.கயூரன் (3A,2B, 2C,2S )
த.ரகுபாலன் ( 2A, 3B, 3C, s)
பா.நிலக்சன் ( 2A, 3B, 2C, S)
சி.தீபனா ( 2A, 2B,1C,4S)
அ.பிரசன்னா ( 2A, 3B,3C, S)
த.துவாரகன் ( 2A, 4C, 2S)
ச.சிற்சொரூபன் ( 2A, 1B, 1C,4S)
ம.றொசான் ( 2A, 1B,1c,3S)
ஜெ.யதுசன் ( 2A, 4C, 2S)
சி.மலரவன் (2A, B,4C,S)
த.கிருபாகரன் (2A,2C,3S)

தோற்றியோர் 83
உயர்தரம் கற்க தகுதி பெற்றோர் – 50
சித்தி வீதம் – 61%

பாடங்களுக்கான சித்திவீதம்

சைவ சமயம் 87.5%
கிறிஸ்தவம் 100%
தமிழ் 78.3%
ஆங்கிலம் 20.4%
விஞ்ஞானம் 56.6%
கணிதம் 60.2%
வரலாறு 74.6%
புவியியல் 96%
வர்த்தகம் 90.6%
குடியுரிமை 27%
சங்கீதம் 83.3%
சித்திரம் 71.4%
நடனம் 100%
நாடகம் 94.2%
விவசாயம் 93.3%
மனைப்பொருளியல் 85.7%
ICT 90%
சுகாதாரம் உடற்கல்வி 70%

[:]

0 Comments

Leave A Reply