10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் இந்துக்கல்லூரியின் உருவாக்கத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களின் பங்களிப்பு – கட்டுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துஇலக்கிய மரபிலும் இந்துப்பண்பாட்டு மரபிலும் முக்கிய பங்காற்றிய பேரறிஞர்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். யாழ்ப்பாணமண்ணை பாரம்பரியமாகக் கொண்ட இவர்கள் அந்நியர் ஆட்சிக்காலத்தில் சைவமும் தமிழும் தழைத்;தோங்க அயராது உழைத்த பெருந்தகைகளாக விளங்குகின்றனர்.நீர்வேலியைப்பிறப்பிடமாகக் கொண்ட சிவசங்கரபண்டிதர் நாவலர் பெருமானாரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் இந்துப்பண்பாட்டின் ஒரு கனதியான பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.தமிழ்மொழியிலும் ஆழ்நத் புலமைகொண்டவர்களாகவும் சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இந்துசமயத்தத்துவம் தர்க்கம் ஆகியவற்றிலும் கிறிஸ்தவசமயத்திலும் சிறப்புத்தேர்ச்சிபெற்றவராக விளங்குகிறார்.1821 ஆம் ஆண்டு விரோதி வருடம் சிதத்pரை மாதம் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்த சிவசங்கர பண்டிதர் சிறப்பாண முறையில் கல்விகற்று பலரும் போற்றும் பண்புடையாளராக விளங்கிய  இவருக்கு நீர்வேலியில் இவரது தாய் மாமனராகிய சின்னத்தம்பி என்பவரது புத்திரி தங்கமுத்து அம்மாளை பருவத்தே மணமுடித்து வைத்தனர். இவர்கள் வாழ்வின் நற்பேறாக சிவப்பிரகாசப்பிள்ளை சிவகுருநாதபிள்ளை ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்களில்  சிவப்பிரகாசப்பிள்ளை என்பவரே அத்தியார் கல்லூரியின் உருவாக்கத்திற்கு காரணமாக திகழ்ந்துள்ளார். அதாவது சிவசங்கர பண்டிதரின் சைவம் தமிழ் வேதம் ஆகமம் மீதுள்ள ஆழ்புலமைகாரணமாக  தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக கிறீஸ்தவ மத கண்டனங்களை மேற்கொண்டு இவற்றை வளர்க்க அரும்பாடுபட்டார். இத்தகைய பின்ணனி அவர் மகனுக்குக் கடத்தப்பட்டு சைவம் தமிழ் வேதம் ஆகமம் போன்றவற்றை வளர்க்கும் நோக்கில் ஒரு வித்தியசாலையை நீர்வேலியில் 1880 இல் நிறுவினார்.

ஆன்றைய காலத்தில் குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டளவில் நீர்வேலியில் மூன்று வகையான பாடசாலைகள் காணப்பட்டன. அவையாவன இலங்கை திருச்சபையால் அமைக்கப்பட்ட பாடசாலை கத்தோலிக்கப்பாடசாலை இந்துப்பாடசாலை என்பனவாகும். இவற்றுள் இந்துப்பாடசாலை சிவசங்கர பண்டிதர் குடும்பத்தவரால் அமைக்கப்பட்டது. “ பண்டிதர்கோட்டம்” எனும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அமைக்கப்பட்டதனால் பண்டிதர் பாடசாலை என அழைக்கப்பட்டதோடு அது சைவபிரகாச வித்தியாசாலை என பதிவுப்பெயர் கொண்டதாக இவ் இந்துக்கல்லூரி விளங்கியது. இது ஒரு தனியார் இந்துப்பாடசாலையாக விளங்கியதுடன் இப்பாடசாலையில்  7 ஆம் 8ஆம் வகுப்புக்கள்  வரை நடைபெற்றன. பிரத்தியோகமாக  தமிழ் சைவ சமய வேத ஆகம இதிகாச புராணசமஸ்கிருத வகுப்புக்கள் நடாத்தப்பட்டதுடன் உள்ளூர் பிள்ளைகளே கூடுதலாக அதிலும் குறிப்பாக பிராமணப் பிள்ளைகளே அதிகம் கற்றனர்.சிவப்பிரகாசபண்டிதர் குழாமே ஆசிரியராக செயற்பட்டனா். இதற்குச்சான்றாக அமையும் ஒருவரே அவர்காலத்தில் வாழ்ந்து நல்கிய பிராமணப்பெரியார்களில் ஒருவராகிய அருள்மிகு வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சுப்பிரமணிய ஆபதோத்தாரண குருக்கள் ஆவர்.

நுற்றாண்டுகளுக்குமேல் இயங்கிய இப்பாடசாலை சிவப்பிரகாசபண்டிதரின் மறைவின் பின் அவரின் மகன் நடராஜப்பண்டிதரால் நிர்வகிக்கப்பட்டு  வந்தது. இக்காலத்தில் பண்டிதர் குடும்பத்தினர் தமது சொந்நச்செலவில்  காணி வாங்கி சாதாரண கொட்டில்கள் அமைத்து குருசிஸ்யப் பாரம்பரியத்துடன் கல்வி போதித்திருந்தனர்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக குறிப்பாக பொருளாதாரப்பிரச்சினை காரணமாக பண்டிதர் நடராஜரால் பாடசாலை நடாத்த முடியாத நிலைவந்து அதனை அவர் கையளிக்க விரும்பிய நிலையில் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்கள் அதனை விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கினார்.பண்டிதர் காலத்தில் இருந்த காணியை விட மேலும் பல காணிகளை வாங்கி பாடசாலையை விஸ்தரிக்கும் பணியில் அத்தியார் அருணாசலம் அவர்கள் ஈடுபட்டார்.காலப்போக்கில் கட்டடங்கள் பலவும் அமைக்கப்பட்டு கல்விச்செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து அத்தியார் அருணாசலத்தின் பொறுப்பின் கீழ் தமிழ்ப்பாடசாலை இயங்கிவந்த அதேவேளை ஆங்கிலக்கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் ஒரு உபபாடசாலையான நீர்வேலி இந்து ஆங்கிலப் பாடசாலையை 1929 இல் நிறுவினார்.

1945 இல் கலாநிதி w.w.w. கன்னங்கராவினால் இலவச கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது “ஒரு முகாமையின் கீழ் சுதேச மொழி ஆங்கிலமொழிப் போதனைகள் கொண்ட பாடசாலைகள் ஒரே இடத்தில் அமையப்பெற்றிருப்பின் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும்” என கல்விச்சட்டம் வழிவகுத்தமையால் “அத்தியார் இந்துக் கல்லூரியாகிய தமிழ்ப்பாடசலையும் 1929 இல் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி இந்து ஆங்கிலப்பாடசலையும் இணைக்கப்பட்டு அத்தியார் இந்துக் கல்லூரி என்ற நாமத்தில் முழுமைபெற்று இயங்கத்தொடங்கியது.

இது காலப்போக்கில் பல்வேறு அதிபர்களால் நிர்வகிக்ப்பட்டு அரச கல்வித்திட்டங்களின் நடைமுறை மற்றும் உதவிகளுக்கேற்ப பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி உலகிற்கு தந்தவண்ணமுள்ளது. இக்கல்லூரி அன்ணையின் உருவாக்கத்திற்கு வித்திட்ட பண்டிதர் குடும்பத்தவர் என்றும் நினைவுகூரத்தக்கவர்கள். விருட்சமாக மலர்ந்திருக்கும் இன்றைய கல்லூரி என்ற மரத்திற்கு விதையிட்டவர்களாக விளங்கும் பண்டிதர் குடும்பத்தவரது தத்துவ உணர்வும் தியாக உணர்வும் என்றும் தொடர்துவரும் சந்ததியினரால் காலம் காலமாக நினைவிலிருத்தி போற்ற வேண்டும்.

உலகில் பாரிய வெற்றிகளும் மிகப்பெரிய சாதனைகளும் கடுமையாண சவால்களுக்கு உட்பட்டபின்னர்தான் நிகழ்ந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. பல அறிஞாக்ள் தங்களது வாழ்நாளில் பல்வேறு சோதனைகளுக்குட்பட்டு பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு உருவாக்கிய கொள்கைகளும் கோட்பாடுகளும் கருவிகளுமே இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதேபேல இப்பாடசாலையின் கல்விவளர்ச்சி சங்கரபண்டிதர் பரம்பரையினராலும் அத்தியார் குடும்பத்தினராலும் மேற்கொண்ட தியாகங்களினாலும் சோதனைகளினாலும் விளைந்த முத்துக்களாகும்

சைவ சமயம் தமிழ் போன்றவற்றை வளர்க்கவும் பேணிப்பாதுகாக்கும் நோக்குடனும் இயற்கையுடன் ஒன்றித்து குருகுலப்பாரம்பரியத்துடன் கூடிய கல்வியை நிலைநாட்ட வித்திட்ட சைவப்பிரகாச வித்தியாசாலை எனும் விதை இன்று மரமாகி விருட்சமாகி அத்தியார் இந்துக்கல்லூரியாக விளங்கி பல புலமையாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியதுடன் எமது பண்பாட்டின் அணிகலாக விளங்குகின்ற எமது கல்லூரித்தாயின் வரலாற்றுப்பொட்டகத்தினை அடுத்துவரும் சந்ததியினரும் அறியவைப்பதற்காக இதை எழுதுகின்றேன் நானும் ஒரு பண்பாட்டின் குழந்தையாக……..

நன்றி

சாணக்கியன்

0 Comments

Leave A Reply