10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி கண்ட நல்ல அதிபர்……..

55555555555555நீர்வேலி  அத்தியார்  இந்துக்கல்லூரி  வரலாற்றில்   மிக நல்ல அதிபர் வரிசையில் திரு.செல்வநாயகம் பத்மநாதன் அவர்களும் ஒருவர் ஆவார். ஆளுமையுள்ள நேர்மையான கட்டுப்பாடுகள் நிறைந்த அதிபர் அவர். அத்தியார் இந்துக்கல்லூரி ஒரு பழைய மாணவனை அதிபராக பெற்றது இதுவே முதல்த் தடவையாகும். தேசிய பாடசாலையில் அதிபராக இருந்த காரணத்தினால் அங்கு நிலவிய நாகரீகத்தினையும்  பழக்க வழக்கங்களையும் கட்டுப்பாடுகளையும்  நிர்வாகமுறைகளையும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் நடைமுறைப்படுத்தி யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கு இணையாக எமது நீர்வேலி மாணவர்களையும் பண்பாடு பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார். யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகம் இவரை கௌரவமாக அத்தியார் இந்துவுக்கு 02.11.2011 இல் அனுப்பியது. அதிபர் அவர்கள் விருப்பமின்றியே இப்பாடசாலைக்கு வந்திருந்தாலும் தனது கடமையை செவ்வனே செய்து எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். 02.11.2011 இல் அதிபராக கடமையேற்று 07.09.2014 அன்று ஓய்வுபெறும் வரை பாடசாலையில் பலவேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தார். தற்பொழுது  எத்தனையோ சவால்களின்  பின்னர் மாணவர்கள்  மத்தியில் ஒழுக்கம்  நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் அத்துடன் பண்புசார் விருத்தியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதிபர் திரு.செல்வநாயகம் பத்மநாதன் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் சதுரங்க விளையாட்டினை அத்தியாரில் அறிமுகப்படுத்தி சிறந்த  வீரர்களை உருவாக்கி  பல  இடங்களைப்  பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் கட்புல செவிப்புல அறை(Audio Visual Room) உருவாக்கப்பட்டுள்ளது.தினமும் பொது அறிவுத்திட்டம் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கலை வளர்ச்சி பண்பாடு என்பவற்றை மேம்படுத்தும் நோக்கோடு அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கி முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கண்டியில் நடைபெற்ற சர்வதேச சாரணிய பாசறையில் இவர் மாணவர்களை பங்குபெற வைத்தார்.தமிழ்விழா ஆங்கிலதினவிழா  இல்லவிளையாட்டுப்போட்டி என்பன சிறப்பாக இவரது காலத்தில் நடைபெற்றுள்ளது.கோட்டமட்ட ஆங்கிலப்பேபாட்டியில் 85 மாணவர்களை பங்குபெற வைத்து 17 இடங்கள் பெறப்பட்டது.தமிழ்த்தினப்போட்டியிலும் கோட்டமட்டப்போட்டியிலும் மாணவர்கள் அதிக இடங்களை பெற்றிருந்தனர்.க.பொ.த (சா.த) தரத்தில் 65 வீதமான சித்திகளைப்பெற்று கோப்பாய்க்கோட்டத்தில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

கா.பொ.த(உ/த) தரத்தில் 2012 பிரிவில் 16  மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினையும் கணிசமான மாணவர்கள் கல்வியியற் கல்லூரி செல்லும் வாய்ப்பினைப்பெற்றுள்ளனர்.அத்துடன் இலண்டன் பழையமாணவர் சங்கத்துடன் இணைந்து பழைய அதிபர் அலுவலகத்தினை மிகத்தரமாக அதன் பழமை மாறாமல் நுட்பமாக திருத்தியமைத்திருந்தார்.பழைய மாணவர்களை இணைத்து இளைஞர்கள் நிறைந்த செயற்பாடு நிறைந்த மன்றமாக இயங்க வழிவகுத்தார்.இவ்வாறான நல்லதிபர் பாடசாலையில் இருந்து ஓய்வுபெறுவது மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் திரு.செல்வநாயகம் பத்மநாதன் அவர்களின் கல்வி-வாழ்வியில்..

திரு.செல்வநாயகம் பத்மநாதன் அவர்கள் 07.09.1954 இல் பிறந்தார். அரம்பக்கல்வியினை 7 ம் வகுப்பு வரை  8 ஆண்டுகள் அத்தியார் இந்துக்கல்லூரியில் கற்றார்.

இடைநிலைக்கல்வியினை புத்தூர்  சோமஸ்கந்தாக்கல்லூரியில் O/L வரையும்

க.பொ.த (உ.த) இனை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும்

பல்கலைக்கழக கல்வியினை பெரதெனியா பல்கலைக்கழகத்திலும்

பட்டப்பின் டிப்ளோமாவை யாழ்பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருந்தார்.

02.05.1989 பளை றோ.க.த.க பாடசாலை இல் ஆசிரியராக நியமனம் பெற்றுக்கொண்டார்.

28.04.1993 இல் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்

2000 ஆண்டு மத்திய கல்லூரியில் -பகுதித்தலைவர்

01.01.2002 பிரதி அதிபர்

14.10.2005 தொடக்கம் 05.12.2005 வரை யாழ் மத்திய கல்லூரி அதிபர்

06.12.2008 -01.12.2011 வரை இல் மீண்டும் மத்திய கல்லூரியில் பிரதியதிபர்

02.11.2011 இல் இருந்து அத்தியார் இந்துக்கல்லூரி

07.09.2014 ஓய்வு..

அதிபர் திரு.செல்வநாயகம் பத்மநாதன் அவர்களின் ஓய்வுகாலம் சிறக்கவும் பல்லாண்டுகள் சிறப்பாக வாழவும் எமது இணையம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

…………………………………………………………………………………………………………………………………………….

555555555555555

………………………………………………………………………..
7777777777777777777777
………………………………………………………………………………………………………………………………
10699094_10152472330638022_706223446_nஅத்தியார் இந்துக் கல்லூரியின் சிறந்த அதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்து குறுகிய காலத்தில் தங்களால் இயன்றளவு சேவையாற்றி தொடர்ந்தும் பாடசாலையை முதன்மை இடத்தில் தக்கவைப்பதற்கு அரும் பாடுபட்டு உழைத்த தங்களை நீர்வேலியின் கல்விச்சமூகம் என்றென்றும் மறவாது. தாங்கள் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒரு சிறந்த நிர்வாகியாக, சிறந்த வழிகாட்டியாக, சிறந்த அலோசகராக நாம் பிறந்த மண்ணிற்கு தொடர்ந்து  சேவையாற்ற  எனது இதயபூர்வமான   வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்.  மணிவிழாக் காணும் தங்களை கனடா வாழ்  நீர்வேலி  மக்கள் சார்பாகவும் சோமாஸ்கந்தக்கல்லூரி பழையமாணவர்கள் சார்பாகவும் நீடூழி வாழ்க என வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,

ஜீவா கோபாலசிங்கம்

தலைவர்

ஸ்ரீ சோமஸ்கந்தாக்கல்லூரி

பழைய மாணவர் சங்கம்
கனடா.

……………………………………………………………………………………………………

345

1 Comment

  1. Dear Pathmanathan

    you had done a very good job/service to AHC and Neervely people

    Kind regards

    Anpudan Kankesan

Leave A Reply