10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார்,றோ.க.த.க ஆகிய பாடசாலைகளுக்கு உதவி

kkkkkkkkkkநீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்தவரும் தற்போது இலண்டனில் வசிப்பவருமான திருமதி கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் (100 000/= )  நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலைக்கு  எழுபத்து மூன்று ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்து ஐந்து ரூபாவும் (  73355/= ) பரிசளிப்பு விழாவுக்கென நிதி அன்பளிப்பு வழங்கியுள்ளார். தனது பெற்றோர்களான அமரர்கள் திரு திருமதி அப்பாபிள்ளை ஞாபகார்த்தமாக இந்நிதி அன்பளிப்புக்களை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளார். இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் கிளை மற்றும் நீர்வேலி நலன்புரிச் சங்கம்  ஆகிய அமைப்புக்களின் உறுப்பினருமாவார். மேலும் நீர்வேலி  R.C பாடசாலை  , அத்தியார் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி கமலா பாலசுப்பிரமணியம் அவர்களின் நன்கொடைக்காக இரண்டு பாடசாலைகளின் கல்விச்சமூகத்தினர்களும்  உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments