10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் இந்துக்கல்லூரியில் இல்லமெய்வல்லுநர் போட்டி

அத்தியார் இந்துக் கல்லூரியின் வருடாந்த  இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. அதிபர் திரு.கு.ரவீசந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு.அ.பரஞ்சோதி  அவர்களும் சிறப்பு விருந்தினராக கனடா நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் பழைய மாணவி திருமதி செல்வராணி மகாத்மசீலன் அவர்களும் ஜேர்மனியில் இருந்து வருகை தந்திருக்கும் பழைய மாணவன் திரு.ந.சாந்தரூபன் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply