10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியாரில் மரதன் ஓட்டநிகழ்வு நடைபெறவுள்ளது.

imagesCA32NN3Zநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் எதிர்வரும் 21.02.2014 அன்று நடைபெறவுள்ள இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு 14.02.2014 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு மரதன் ஓட்டநிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு பாடசாலை முன்றலில் ஆரம்பித்து பருத்தித்தறை வீதி ஊடாக சென்று நீர்வேலி சந்தியினை அடைந்து பின்னர் குறுக்கு வீதி ஊடாக மாசிவன் சந்தியினை அடைந்து பின்னர் இராச வீதி ஊடாக கரந்தன் சந்தியினை அடைந்து கரந்தன் வீதி ஊடாக கந்தசுவாமி கோவில் பின்னர் மீண்டும் பாடசாலையினை வந்தடைவர்.மேற்படி வீதிகளில் வதிவோர் ஓட்ட வீர வீராங்கனைகளுக்கு ஊக்கமும் வசதிகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

0 Comments

Leave A Reply