10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரியில் கணனிகளின் பரிதாபநிலை[:]

[:ta]

எமது ஊரின் அருகில் காணப்படுகின்ற பாடசாலைகளில் பழையமாணவர்களின் செல்வாக்கினாலும் ஏனைய உதவிகளினாலும் ஏராளமான கணனிகள் காணப்படுகின்றன. இதனால் அங்கு கற்கும் மாணவர்களும் கணனி சார்ந்த வேலைகளிலும் செயற்பாடுகளிலும் உயர்நிலைக்குச் சென்றுகொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எங்கள் ஊரின் தாய்ப்பாடசாலை ,எங்கள் ஊரின் முதன்மைப்பாடசாலையில்   கணனி கற்க எராளமான மாணவர்கள் இருந்தும் கணனிகள் போதியளவு  இல்லை. அத்தியாரில் கல்வி  கற்று தற்பொழுது உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பழைய மாணவர்கள் வாழ்கின்றனர். அதில் 25 பழைய மாணவர்கள் ஆளுக்கொரு கணனியினை வழங்க  முன்வந்தால் எமது பாடசாலை மாணவர்களும் கணனிக்கல்வியினை  பெறுவார்கள்.  ஏற்கனவே பாடசாலையில் கணனிகள் காணப்பட்டன. அவை பழுதடைந்து விட்டன. அத்துடன் அவற்றின் காலமும் முடிவடைந்து விட்டது. இரண்டு அல்லது மூன்று கணனிகளே தற்போது அலுவலகத்தின் தேவைகளை நிறைவு செய்கின்றது. எனவே மாணவர்களின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு பழைய மாணவர்களாகிய நாங்கள் கணனியகத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். ஓரு புதிய கணனியின் விலையானது இலங்கைப்பணத்தில் 60 000 ரூபா ஆகும். இலண்டன் காசில் 300 பவுண்ஸ். கனடா 600 டொலர். ஐரோப்பா எனில் 320 Euro.  உங்கள் உறவினர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக கணனிகளை பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கலாம். மாணவர்களுக்காக முன்வாருங்கள்  இது எமது இணையத்தின் வேண்டுகோளாகும்.

[:]

0 Comments

Leave A Reply