[:ta]அத்தியார் இந்துக்கல்லூரிக்கும் வர்ணம் பூசலாமா ?[:]
[:ta]யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் தங்களுடைய கட்டிடங்களுக்கு கவர்ச்சியானதும் அழகானதுமான வர்ணங்களை தீட்டி வருகின்றன. இதனால் அப்பாடசாலைகள் மிகவும் அழகாகவும் மாணவர்களை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது. ஆனால் அத்தியார் இந்துக்கல்லூரி பல தசாப்தகாலங்களாக காவி வர்ணத்தில் அப்படியே காணப்படுகின்றது. ஒவ்வொரு பழைய மாணவரும் அல்லது குடும்பமாக இணைந்து ஓவ்வொரு கட்டிடத்தினையும் பொறுப்பேற்று வர்ணம் தீட்ட முடியும். ஏற்கனவே உதவி புரிந்த பழைய மாணவர்கள் இதில் இணையத்தேவையில்லை. பழைய மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையின்பால் இணைந்தால் எங்கள் ஊரின் தாய்ப்பாடசாலையான அத்தியார் இந்துக்கல்லூரியை புதிய தோற்றத்தில் பார்க்கலாம். இல்லையேல் இருந்தது போல தொடர்ந்தும் காணப்படும். இது எமது இணையத்தின் கருத்தாகும்.
பாடசாலை அலுவலக தொலைத்தொடர்பு இல 021 223 0499
Everybody should thinking about it lots of old students live in all over the world they should do it thanks so much.