10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி- நன்றி நவிலல்[:]

[:ta]

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்டையில் பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நீர்வேலி தெற்கை சேர்ந்த திரு.நடராஜா ஸ்ரீரங்கன் தனது தந்தையார் அமரர் சி.நடராஜா ஞாபகார்த்தமாக தனது உறவினரான அத்தியார் இந்துவின் முன்னாள் உபஅதிபர் திரு.ஐ.சிவராஜா அவர்கள் மூலம் பாடசாலை அதிபரிடம் 150 000 ரூபா பெறுமதியான 20 ஒலிபெருக்கிகளும் 25.01.2018    அன்று  கையளிக்கப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது அதன் வேலைகள் யாவும் நிறைவடைந்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலை முடிவடையும் நேரத்தில் ஒலிபரப்பப்படும் பாடசாலைக்கீதம்  தினசரி பொது அறிவு ஒலிபரப்பல்  மற்றும் வசேட அறிவிப்புக்கள் என்பன மேற்படி ஒலிபரப்பினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதயம் கனிந்த நன்றிகள் ஸ்ரீரங்கன் அவர்களே.

 [:]

0 Comments

Leave A Reply