10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரி -O/L Results பகுப்பாய்வு

ஒரு பாடசாலையின் சித்தி வீதம் கணித பாட சித்தியிலேயே கணிக்கப்படும். அந்த வகையில் அத்தியார் இந்துக்கல்லூரியில் நேற்று வெளியான கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில்  கணிதபாடத்தில்  79.5 வீத சித்தி பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 62 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தார்கள். அவர்களில் 50 மாணவர்கள் A/L க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் 30 மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர் அவர்களினது கல்வி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளின் காரணமாகவும் ஆசிரியர்களின்  வழிகாட்டல்கள் மற்றும் மாணவர்களது அயராத முயற்சியினாலும் பாடசாலையின் நன்மதிப்பு உயர்ந்து நிற்கின்றது. இனி வரும் காலங்களில்  அதிபர் அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் ஆதரவுக்கரமாக இருக்கவேண்டும்.


0 Comments