10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் நிதியுதவி

நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த திரு சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தனது மனைவி அமரர்  திருமதி .கண்மணியம்மா கணபதிப்பிள்ளை மற்றும்  மகளான   அமரர் செல்வி .அபிராமி கணபதிப்பிள்ளை ஆகிய  இருவரினதும் ஞாபகார்த்தமாக அத்தியார் இந்துக்கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் நிதியுதவியினை பாடசாலை அதிபர் அவர்களிடம் வழங்கியுள்ளார். கல்லூரியின் ஸ்தாபகர் தினத்திற்கு ரூபா பத்தாயிரமும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு ரூபா பதினையாயிரமும் கட்டுரைப்போட்டிக்காக ரூபா 25 000 ம் வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு ரூபா 50 000 ம் என்ற வகைகளுக்குள் மேற்படி ரூபா ஒரு இலட்சம் நிதியுதவியினை திரு .சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியுள்ளார். பாராட்டுக்கள்

0 Comments