10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அத்தியார் இந்துவில் இல்லமெய்வல்லுநர் போட்டி-2015

sport-symbolsநீர்வேலி  அத்தியார்  இந்துக் கல்லூரியில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும்  13.02.2015  வெள்ளிக்கிழமை  பி.ப 1.30  மணிக்கு கல்லூரியின் அதிபர் திரு.கு.ரவிச்சந்திரன்  தலைமையில்  நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் பிரதமவிருந்தினராக திரு.ஆ.இராஜேந்திரன் (மாகாணக் கல்விப்பணிப்பாளர்) அவர்களும் சிறப்புவிருந்தினராக திருமதி வனஜா செல்வரட்ணம் (பழைய மாணவி) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக  நீர்வேலி  தெற்கு கிராமசேவகர்  திரு.சி.தயாபரன் அவர்களும் பவானி களஞ்சிய உரிமையாளர்  திரு.பொ.கிருஸ்ணானந்தன் அவர்களும் பழைய மாணவர் திரு.சி.பொன்னுச்சாமி (பிரான்ஸ்) அவர்களும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக விளையாட்டுக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments