10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் மற்றும் கரந்தன் பாடசாலைக்கு கணனிகள் அன்பளிப்பு

நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வதியும் திரு.புண்ணிமூர்த்தி அவர்கள் தனது தாயாரின் 31 ம் நாள் நினைவு நாளான 03.01.2020 அன்று  தனது தாயாரின் நினைவாக நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு இரண்டு கணனிகளையும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு ஒரு கணனியினையும்  பாடசாலைகளின் அதிபர்களிடம்  வழங்கியுள்ளார். பாராட்டுக்கள் திரு புண்ணியமூர்த்தி அவர்களே. இதுவரை  அத்தியார் பாடசாலைக்கு 5 க்கு மேற்பட்ட கணனிகளை வழங்கியுள்ளார்.கரந்தன் இராமுப்பிள்ளை பாடசாலைக்கும் ஏற்கனவே 01 கணனியினை வழங்கியிருந்தார். இவர் அத்தியார் இந்துக்கல்லூரி கணனியகத்திற்கு இன்ரர் நெற் இனை தனது செலவில் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.  கல்வியை முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்  உதவிகளை மேற்கொண்டுவரும் திரு.புண்ணிமூர்த்தி அவர்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.


0 Comments

Leave A Reply