10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அத்தியார் -மைதானம் 3.2 மில்லியன் ஒதுக்கீட்டில் புனரமைப்பு

கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முன்மொழிவினால், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி மைதானம் சுமார் 3.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுகின்றது.நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும்
உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின்கீழ், யாழ் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட மைதானங்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முன்மொழிவில், யாழ் மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் கல்லூரி, வரணி மத்திய கல்லூரி, புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய 05 பாடசாலை விளையாட்டு மைதானங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில், கோப்பாய் கல்விக் கோட்டத்தில் உள்ள நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி மைதானமானது, கோப்பாய் பிரதேசத்தின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாகும். கோட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள், உதைப்பந்தாட்ட போட்டிகள் என்பன நடாத்தப்படுகின்ற இம்மைதானமானது, 400M ஓட்டப்பாதையை கொண்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
இம்மைதானத்தை புனரமைப்பதன் ஊடாக, கோப்பாய் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்கள் தமது தடகள மற்றும் உதைப்பந்தாட்ட திறமைகளை வளப்படுத்துவதற்கு பெரும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், ஒவ்வொரு மைதானத்துக்கும் தலா 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்துறை திறமைகளை விருத்தி செய்வதன் ஊடாக யாழ். மாவட்டத்தை “விளையாட்டுத்துறையில் முதலிடம்” எனும் நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இத்தகைய அபிவிருத்திகள் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முன்மொழிவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave A Reply