10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முன்மொழிவுகள்

  • நீர்வேலியில் பல வீதிகள் உண்டு.பல ஒழுங்கைகளும் உண்டு.எந்த வீதிக்கும் பெயர் கிடையாது.அந்த வீதிகளில் வதிகின்ற எமது ஊரவர்களுக்கே தங்கள் வீடு எந்த வீதியில் உள்ளது என்று தெரியாது.எமது பிரதேச சபையும் பெயர்பலகைகளை நாட்டவில்லை.தபால்களில் முகவரி இடும் போது நீர்வேலி தெற்கில் உள்ள ஒருவருக்கு கடிதம் அல்லது நேரே செல்ல வேண்டுமெனின் கந்தசாமி கோவிலில் இருந்து கரந்தன் சந்திவரை நீர்வேலி தெற்கு என்றே எழுதப்படுகிறது.இதனால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது.எல்லா ஒழுங்கைகள் வீதிகளுக்கு பெயர்ப்பலகை இடும்போது எங்கள் ஊரும் அழகாகும் தபால்காரருக்கும் பயணிகளுக்கும் பயன்படும்.

 

  • நீர்வேலி இந்து மயானம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மரணவீட்டிற்காக செல்பவர்கள் தங்குவதற்கு இடமில்லை.

 

  • நீர்வேலி சனசமூக நிலையங்கள் பல பத்திரிகை இன்றி இயங்காது இருக்கின்றன.அனை்த்து சனசமூகநிலையங்களுக்கும் ஏதாவது நிறுவனங்களின் உதவியுடன் ஒரு நிறுவனத்தில் இருந்து பத்திரிகைகளை வழங்கலாம்.