10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அப்பா_என்பவர்_எப்போதும்_அப்பாதான்

நாம வாழைத்தோட்டம் செய்யுறம். அது தெரிந்த அப்பாவின் ஆபிஸ் நண்பர்கள் தங்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு வாழை இலை கேட்பார்கள். அப்பா வீட்டை வந்து தம்பி வாழை இலை வெட்ட தோட்டம் வாறியா என்று கேட்பார். உடனே நான் சீறிச்சினந்து எத்தினை இலை, காசு தருவினமோ, ஏன் ஓம் என்று சொல்லிட்டு வாறனீங்கள் என்று பேசிவிட்டு சில வேளைகளில் தான் தோட்டம் போறது கூடுதலாக போவதே கிடையாது.

இன்று எனது ஆபிஸ்ல பெரியவர் ஒருவர் என்னிடம் வாழை இலை கேட்டார் மறுக்க முடியவில்லை. வீட்டை வந்து அப்பாவிடம் ஆபிஸ்ல வாழை இலை கேட்டாங்க என்ன செய்யலாம் என்றேன். உடனே அப்பா எத்தினை இலை வேணும் மழை வரப்போகுது கெதியா வா போய் வெட்டுவம் என்று கத்தியை தூக்கினார்.

அதாகப்பட்டது_வாழ்க்கை_ஒரு_வட்டம்_

அப்படியே_சுழன்றடிக்கும் நாம_ஒவ்வொரு_நாளும்_

ஒவ்வொரு_பாடங்களை_படிக்கின்றோம்.

அப்பா_என்பவர்_எப்போதும் அப்பாதான்

0 Comments

Leave A Reply