10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரிபிள்ளையார் கோவிலில் புதிதாக சப்பறம்

நீர்வேலி அரசகேசரிபிள்ளையார் கோவிலில் புதிதாக சப்பறம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு காலமும் சப்பறத்திருவிழாவின் போது சப்பறம் இன்மையால் மணவறை போன்ற அலங்கரிக்கப்பட்ட சப்பறமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சப்பறத்திருவிழா உபயகாரர்களான திரு.மா.திருவாசகம் , திரு.ச.இலங்கைநாதன் ஆகியோரின் நிதி அன்பளிப்பில் புதிய சப்பறத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது இப்புதிய சப்பறம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.(தகவல்- நிர்வாகத்தினர்)

0 Comments

Leave A Reply