நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் மணவாளக்கோலமும் மகேஸ்வர பூசையும் நடைபெறவுள்ளது.
”நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் 2014 ஆம் வருட மணவாளக்கோலமும் வைகாசிமாத மகேஸ்வர பூசையும் 10.06.2014 செவ்வாய்க்கிழமை தொடக்கம் நடைபெறவுள்ளது. விநாயகப்பெருமானுக்கு 108 சங்குகளாலும் சிவன் அம்மன் பரிவார மூர்த்திகளுக்கு ஸ்னபன அபிடேகமும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. 10.06.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அபிடேகம் ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு அழகிய பூந்தண்டியில் எம்பெருமான் வீதிவலம் வரவார். 12.06.2014 வியாழக்கிழமை மகேஸ்வர பூசையும் அன்னதானும் இடம்பெறவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு எம்பெருமானின் இஸ்டசித்திகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments