10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரிப்பிள்ளையார் கோவில் -மஹோற்சவ விஞ்ஞாபனம்

im20121050_ganapathiநிகழும் மங்கலவருடம் மன்மதவருடம் ஆவணித்திங்கள் 31 ம் நாள் 17.09.2015 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சரித்திரப் பிரசித்திபெற்ற நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாருக்கு கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து 11 நாட்கள் மஹோற்சவம் நடைபெறும்.  அத்துடன் 25.09.2015 அன்று சப்பறத் திருவிழாவும் 26.09.2015 சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது. 29.09.2015 அன்று வைரவர் மடை என அழைக்கப்படும் வைரவர் சாந்தியும் நடைபெறும். தினமும் பகல்த்திருவிழா காலை 11.00 மணிக்கு வசந்தமண்டப ஆராதனையுடன் ஆரம்பமாகி பி.ப 1.00 மணிக்கு நிறைவடையும். இரவுத்திருவிழா மாலை 06.30 க்கு வசந்தமண்டப ஆராதனையுடன் ஆரம்பமாகி இரவு 8.30 மணிக்கு நிறைவடையும். தேர்த்திருவிழாவின் போது வசந்தமண்டப ஆராதனை காலை 6.00 மணிக்கும் தீர்த்தம் காலை 11.00 மணிக்கும் நடைபெறும்.

0 Comments

Leave A Reply