10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் பட்டிமண்டபம்

unnamedநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார்  கோவில் பூங்காவனத் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாக பட்டிமண்டபம் இடம்பெற்றது. மகிழ்சிகரமான வாழ்விற்குப் பெரிதும் துணைசெய்வது அறிவியலா? ஆன்மீகமா என்ற பொருளில் இடம்பெற்ற இப்பட்டிமண்டப நிகழ்வில் அறிவியலே என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் ந.ஐங்கரன் ஆகியோரும் ஆன்மீகமே என்ற பொருளில் சட்டத்தரணி கு. புரந்தரன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் தெ.ஹர்சன் ஆகியோரும் வாதிட்டனர்.

 unnamed
நடுவராக விரிவுரையாளர் ச.லலீசன் கலந்து கொண்டார். நிகழ்வில் பூங்காவனத் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்து சிறப்பித்தார்.

0 Comments

Leave A Reply