10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர்…….

IMG_3296ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் , ஆசிரியர் என்பவர்  என்ன செய்யவேண்டும் மாணவர்களுடன் எவ்வாறு உறவைப் பேணவேண்டும் , சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டும்  என எல்லோருடைய மனதிலும் உயர்ந்த இடத்தில் குடியிருக்கும் எங்கள் ஆசானைப்பற்றி நான் கூறவேண்டிதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் தனது பாடத்தில் எவ்வாறு பூரண அறிவுடன் இருக்கவேண்டும் என்பதற்கும் அவரே சிறந்த உதாரணமானவர். ஆங்கிலத்தின் மீது  அவர் கொண்டிருந்த அளவுகடந்த பற்றினால் பல்லாயிரம் மாணவர்கள் ஆங்கிலபாடத்தில் சிறப்புப்பெற்றனர். தூய்மையான பளீச்சென்று தெரியும் வெள்ளை வேட்டியுடனும் நஸனலுடன் சால்வையுமாக கம்பீரமாக தோன்றுவார்.  வகுப்பறைக்குள் எங்கள் ஆசான் வந்துவிட்டால் எங்களுக்கு பொது அறிவுத்தகவலுக்கு பஞ்சமே இருக்காது. ஒரு சாதாரண வகுப்பறையில் ஆசிரியன் ஒருவன் முப்பது மாணவர்களுடன் படும் பாட்டினை சொல்லமுடியாது.  அவ்வாறான மாணவர்களுடன் திண்டாடும் பல ஆசிரியரை கண்டிருக்கிறேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் சயன்ஸ் கோலில் 300 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட வகுப்பறையில் மன்னிக்கவும் கொட்டிலில் அனைத்து மாணவர்களும் எங்கள் ஆசான் கற்பிக்கும் போது பெட்டிப்பாம்பாக அடங்கிப்போய் இருப்பார்கள். நானும் அக்கூட்டத்தில் ஒருவனாக நீர்வேலியில் இருந்து சென்றிருப்பேன். கூட்டத்தோடு கூட்டமாக நானும் ஆங்கிலம் படிக்கச் சென்றிருந்தேன்.வகுப்பறை முகாமைத்துவம் என்றால் அதுதான் என்பது எனக்கு தெரியவில்லை. காரணம்அப்போது  நான் ஆசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.விதியின் பலனாக வந்துட்டேன். அதன் பின்னரே உணர்ந்தேன் வகுப்பறை முகாமைத்துவத்தினையும் எங்கள் ஆசானின் திறமைகளையும்.

மேற்படி எனது ஆசிரியரின்  வகுப்பில் ஆங்கிலம் கற்க இருக்கும் போது நேரம் போவதே தெரியாது .குழப்படி நிறைந்த மாணவர்களை வகுப்பில் ஒரு மணித்தியாலம் வகுப்பில் வைத்திருக்கவே திணறும் ஆசிரியர் உலகில் மூன்று மணித்தியாலத்திற்கு மேல் சுவாரஸ்சியமாக வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் அழகை எப்படிச்சொல்ல ? கற்றாரைக்  கற்றாரே காமுறுவர். என்பதற்கிணங்கவும் அதையும் தாண்டி  எனது ஆசிரியர் கற்றவர்கள் கல்லாதவர்கள் வேறுபாடு இன்றி  யாராயிருந்தாலும் அவர்களுக்கு மதிப்பளிக்க தவறுவதில்லை.

எங்கள் ஊரில் ஆசிரியர் அவர்களுக்கு இருக்கின்ற பற்றும் மரியாதையும் கண்டு நான் பலதடவை வியந்திருக்கின்றேன். “நான் மண்கும்பானில் பிறந்திருந்தாலும் அங்குதான் வசித்திருப்பேன் என்று கூறியிருந்தார்.தனது ஆயுள் முழுவதும் பிறந்தமண்ணிலேயே வசிப்பதை எமக்கு தெரியப்படுத்துவதற்காக வகுப்பில் ஒருநாள் சொல்லியிருந்தார்.அவரைப்பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளது. தொடர்ந்து எழுதுவது எனில் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

IMG_3296

அவர் எங்கள் நீர்வேலியில் வாழ்வதாலும் அவரிடம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் நான் பெருமையடைகிறேன்.என்னைப்போலவே அனைவரினதும் விருப்பமும் இதுவே. எங்கள் ஆசான் தொடந்தும் நோய்கள் அற்று சுகவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
மாணவன்

1 Comment

  1. நன்றாக எழுதியிருகிறீர்கள், ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது கூட ஆசிரியரால் அடிக்கடி கூறப்படுவது தான்.

    உப்பில்லாவிட்டால்தான் தெரியும் உப்பின் அருமை. அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை என்று கூறுவார்கள். அதேபோல் ஆசியரின் அருமை முழுமையாக அறியப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறிதான்.

Leave A Reply