10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஆட்டு இறைச்சி வெட்டியவர்களை துரத்தி கொட்டிய குளவிகள்.

நீர்வேலியில் ஆட்டு இறைச்சி வெட்டியவர்களை குளவி கலைத்த சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இளைஞர்கள் சிலர் சேர்ந்து வாழைத்தோட்டம் ஒன்றிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் வைத்து ஆட்டு இறைச்சி வெட்டிக்கொண்டிருந்த போது மரத்தின் மேல் காகங்கள் வந்திருந்து கத்திக்கொண்டு நின்றதால் இறைச்சி வெட்டிக்கொண்டிருந்த ஒருவர் கல் எடுத்து காகத்திற்கு எறிந்தார். அந்தக் கல் மரத்தில் இருந்த குளவிக் கூட்டில் பட்டதால் குளவிகள் கலைந்து அங்கு இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தவர்களை விரட்டி விரட்டி குத்தியது. குளவியின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அங்கும் இங்குமாய் ஓடினார்கள்.
இவர்களில் ஒருவர் அங்கிருந்த கிணற்றில் குதித்த நபருக்கு கிணற்றுக் கல்லு குத்தி முகத்தில் காயமடைந்தார்.குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருந்து எடுத்து சென்றார்கள். வெட்டிய இறைச்சிப் பங்குகள் சிதைவடைந்த நிலையில்அரைவாசியையும் எடுத்துச் சென்றனர்.
(நன்றி- நிருஜன் செல்வநாயகம்)

 

 

 

 

0 Comments

Leave A Reply