10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]இணையத்தின் கோரிக்கையினை ஏற்று கனடா இளைஞர்கள் உதவி[:]

[:ta]

எமது இணையத்தினால் விடப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கனடாவில் வாழும் ஐந்து இளைஞர்கள் இணைந்து நீர்வேலியில் வசிக்கின்ற வசதிகுறைந்த  ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த  அத்தியார் இந்துக்கல்லூரியில் கற்கின்ற மாணவி ஒருவருக்கும் யாழ்ப்பாண பாடசாலையில் கற்கின்ற  மாணவர் ஒருவருக்குமான கற்றலுக்கான உதவித்தொகையாக ரூபா ஒரு இலட்சத்தினை (100 000) அவர்களுடைய பெற்றோர்களின் கணக்கில்  நேரடியாக வைப்புச் செய்துள்ளனர். கனடாவில் வசிக்கும் நீர்வேலி தெற்கினைச் சேர்ந்த மதன், றங்கன் ,பாலச்சந்திரன் ஆகியோரும் நீர்வேலி வடக்கினைச் சேர்ந்த தர்சன், மகிந்தன் ஆகியோரும் இணைந்து மேற்படி ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளனர். உதவியினை வழங்கிய ஐந்து இளைஞர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

 

 

 

 

 [:]

1 Comment

  1. kajan says: - reply

    தொடர்க உங்கள்பணி.வாழ்த்துக்கள்

Leave A Reply