இதுவரைநடைபெற்ற செல்லக்கதிர்காமச் செவ்வேளின் மஹோற்சவத்தின் சில காட்சிகள்…
நீர்வைச் செல்லக்கதிர்காமச் செவ்வேளுடைய விஜய வருட மஹோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றதுஇரவு உற்சவத்தின் போது, முறையே, 2ஆம் திருநாளன்று உள்வீதி முழுவதும் திருமுறை ஒலிக்கவும், 3ஆம் திருநாளன்று உள்வீதி முழுவதும் திருப்புகழ் ஒலிக்கவும், 4ஆம் திருநாளன்று உள்வீதி முழுவதும் நால்வேத பாராயணம் ஒலிக்கவும்,5ஆம் திருநாளன்று உள்வீதி முழுவதும் நாலாயிரம் திவ்யபிரபந்த ம் ஒலிக்கவும், 6ஆம் திருநாளன்று உள்வீதி முழுவதும் கீர்த்தனைகளுடன்
நாதகானம் ஒலிக்கவும், இறைவன் வலம் வந்தார்.
சென்ற ஞாயிறன்று மதியம் சந்தானகோபாலர் உத்ஸவமும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
7ஆம் திருநாளான நேற்று மாம்பழத்திருவிழா நடைபெற்றது..
8ஆம் திருநாளான இன்று இரவு கைலாசவாகனத்தில் முருகனின் திருகாட்சி உலா நிகழவுள்ளது
0 Comments