10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இன்று நீர்வைக்கந்தன் கொடியேற்ற நாள்-அவன்முகம் காண முடியவில்லையே …..!

இன்று 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை நீர்வைக்கந்தன் கொடியேற்ற நாள். கொடிய கொரனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட எம்பெருமானின் உற்சவம். ஆனாலும் இன்று நீர்வைக்கந்தனில் விசேட ஆராதனை நடைபெற்றது, பக்தர்கள் ஆனேகமானவர்கள் விரதத்தினை ஆரம்பித்திருக்கிருக்கின்றார்கள். எது எவ்வாறு இருப்பினும் பெருந்திருவிழா தடைப்பட்டமை நீர்வேலி மக்களுக்கும் புலம்பெயர் நீர்வேலி உறவுகளுக்கும் பெருங்கவலையளிக்கின்ற விடயமாகும். ஆனி மாதத்தில் வரும் ஆனி உத்தரத்திற்கு பெருந்திருவிழா நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா ?
முருகா ! முரு…கா.!

அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை _உன்
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை

என்னைப் பட்சமுடன் அழைத்துப்
பரிசளிக்க யாருமில்லை
இக்கணத்தில் நீ நினைத்தால்
எனக்கோர் குறைவில்லை

லட்சியமோ உனக்கு !
உன்னை நான் விடுவதில்லை முரு….கா !

என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்…லை
முருகா ! முரு.கா ! மு..ரு….கா !

மதுரை சோமுவின் குரல்வழி கேட்ட… வேண்டுதல்.

#நீர்வை_நடனம்

0 Comments

Leave A Reply