10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இன்றைய நாளில் நீர்வேலியின் சனத்தொகை 5701 ……

15.06.2016 இன்றைய நாளில் நீர்வேலியின் சனத்தொகை 5701 ஆகவுள்ளது. 8.4 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள நீர்வேலியில் 1889 குடும்பங்களும் அக்குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 5701 ஆகவும் உள்ளது. இந்நிலைமையில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 3 பேர் வாழுகின்றனர். எமது ஊரின் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. அதிகரித்த வெளிநாட்டு மோகம் ,பிறப்பு வீதம் வீழ்ச்சி, இடம் பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு சென்றமை போன்ற காரணங்களாக இருக்கலாம்.நீர்வேலியில் மூன்று  கிராமசேவையாளர் பிரிவு காணப்படுகிறது. 

கிராமசேவையாளர் பிரிவு

நீர்வேலி தெற்கு J/268
நீர்வேலி வடக்கு J/269
நீர்வேலி மேற்கு J/270

நிலப்பரப்பு கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக

நீர்வேலி தெற்கு  3.2  சதுர கிலோமீற்றர்
நீர்வேலி வடக்கு  2.8 சதுர கிலோமீற்றர்
நீர்வேலி மேற்கு  2.4 சதுர கிலோமீற்றர்

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக குடும்பங்கள் 

நீர்வேலி தெற்கு   –  752  குடும்பங்கள் 
நீர்வேலி வடக்கு   – 750  குடும்பங்கள் 
நீர்வேலி மேற்கு   –  387  குடும்பங்கள் 

மொத்தமாக         – 1889  குடும்பங்கள் 

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக சனத்தொகை 

நீர்வேலி தெற்கு   –  2339
நீர்வேலி வடக்கு   –  2119
நீர்வேலி மேற்கு   –  1243

மொத்தமாக         – 5701   பேர்

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக (PAMA ) மாததாந்த உதவிப்பணம் பெறுவோர்

நீர்வேலி தெற்கு   –   121
நீர்வேலி வடக்கு   –  154
நீர்வேலி மேற்கு   –    57

மொத்தமாக    332 பேர்

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக (PAMA ) மாததாந்த முதியோர்  உதவிப்பணம் பெறுவோர்

நீர்வேலி தெற்கு   –   92
நீர்வேலி வடக்கு   –  86
நீர்வேலி மேற்கு   –   47

மொத்தமாக    225 பேர்

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக மாற்றுத்திறனாளிகள்

நீர்வேலி தெற்கு   –   20
நீர்வேலி வடக்கு   –  35
நீர்வேலி மேற்கு   –   13

மொத்தமாக   68 பேர்

கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக பெண் தலைமை

தாங்கும் குடும்பத்தின் எண்ணிக்கை

நீர்வேலி தெற்கு   –   148
நீர்வேலி வடக்கு   –  80
நீர்வேலி மேற்கு   –   110

மொத்தமாக   338 பேர்

 

(Thank you – Vali East Divisional Secretariat office Kopay)

 

0 Comments

Leave A Reply