10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இலங்கை கல்வி நிருவாக சேவை 2016 …..

01. அறிமுகம்

இலங்கை கல்வி நிருவாக சேவை, 1986 ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியீடு செய்யப்பட்ட 42312 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு 1984 டிசம்பர் 31 ஆம் திகதியிலிருந்து அமுல் செய்யப்பட்டது. பின்னர், 2002 மார்ச் 01 ஆம் திகதிய 122532 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலமாக அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக 2015 ஆகஸ்ட் 21 ஆம் திகதி 192828 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இச்சேவைப் பிரமாணக் குறிப்பு 2015.04.17ஆம் திகதி அமுல் செய்யப்பட்டது.

02. சேவையின் பணி
– இலங்கையின் ஒட்டுமொத்த மனித வள அபிவிருத்திக்காக, பொதுவாக கல்வியுடன் தொடர்புடைய தேசிய கல்விக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவியாக இருத்தலும் அமுல் செய்தலும் வழிநடத்தலும்.

– இரண்டாம் நிலைக் கல்விக்கும் இரண்டாம் நிலைக் கல்விக்குப் பிந்திய கல்விக்கும் இடையில் தொடர்பினை கட்டியெழுப்புதல்.

– கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை பயன்படுத்துவதற்காக பங்களிப்புச் செய்வதினூடாக கல்வி முறையில் எல்லா நிறுவனங்களையும் முகாமை செய்வதினூடாகவும் மேற்பார்வை செய்வதினூடாகவும் கல்வியின் தரத்தில் அபிவிருத்தியினை உறுதிப்படுத்தல்.

03. சேவைக்குரிய தரங்கள்
நிறைவேற்று, சிரேஷ்ட நிறைவேற்று தரத்தைக் கொண்டதோடு இது 4 தரங்களையும் கொண்டது.
அவை தரம் 3, தரம் 2, தரம் 1 விசேட தரம் என்பனவாகும்.

04 சேவைக்குரிய பதவிகள்
பொதுச் சேவை ஆணை, விசேட சேவை ஆணை என இரண்டு வகையாக இது பிரிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 2691 அனுமதிக்கப்பட்ட பதவிகளைக் கொண்டது.

05. ஆட்சேர்ப்பு நடைமுறை
ஆட்சேர்ப்பு நடைமுறை மூன்று வகைகளாக இடம்பெறுகின்றது.
1. திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல்
2. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல்
3. சேவை மூப்பு, திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல்

5.1 திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல்
திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு என்பது, பொதுவான பதவியணிக்கு மாத்திரம் இடம்பெறும். எனினும், தகவல் தொழிநுட்பம், உயிரியல் முறைமை மற்றும் இயந்திரவியல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கு விசேட பதவியணிக்காக ஆட்சேர்ப்பு இடம்பெறும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் பட்டமொன்றைப் பெற்றிருத்தல் வேண்டும். வயது 22 வருடங்களுக்கு குறையாமலும் 50 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

ஆட்சேர்ப்புக்காக எழுத்துப் பரீட்சை மற்றும் வாய்மொழிப் பரீட்சை என்பன காணப்படும். எழுத்துப் பரீட்சை 4 வினாப் பத்திரங்களைக் கொண்டதுடன் சித்தியடைய 4 வினாப் பத்திரங்களும் முறையே ஆகக் குறைந்தது 40 புள்ளிகளைப் பெறல் வேண்டும். உச்சப்புள்ளி 100 ஆகும். வாய்மொழிப் பரீட்சைக்காக 25 புள்ளிகள் வழங்கப்படும்.

பாடங்கள்
(1) கிரகித்தல் 1 மணித்தியால வினாக்கள்
(2) நுண்ணறிவுப் பரீட்சை 1 மணித்தியால வினாக்கள்
(3) பொது அறிவு 1 மணித்தியால வினாக்கள்
(4) கட்டுரையும் சுருக்கம் எழுதுதலும் 1 மணித்தியாலமும் 30 நிமிடமும் கொண்ட வினாக்கள்
மட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஆட்சேர்ப்பு செய்தல்

இலங்கை கல்வி நிருவாக சேவையின் தரம் இற்கு பொதுவாக மற்றும் விசேட பதவியணிக்கு பாடசாலைகளிலும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உதவி வழங்கப்படுகின்ற பாடசாலைகளிலும் பிரிவெனாக்களிலும் சேவையாற்றும் பதவி நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெறுகின்றனர்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக எந்தவோர் அபேட்சகரும் மூன்று முறைக்கு மேல் தோற்ற அனுமதி இல்லை. மேலும், திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இரண்டிற்கும் ஐந்து முறைக்கு மேல் தோற்ற அனுமதி இல்லை.

கிட்டிய ஐந்து (5) ஆண்டினுள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தலோடு சேவையின் நியமனம் உறுதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு வயது 50 வருடங்களுக்கு மேற்படலாகாது.

பொதுவான பதவியணி
– பதவி நிரந்தரமாக்கப்பட்டதும் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக் கொண்ட ஆசிரியராக இருப்பின் குறைந்த பட்சம் ஐந்து வருட தொடர்ச்சியான, திருப்திகர கற்றல் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

– ஆசிரியர் பயிற்சி சான்றிதழ், போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் உள்ளவர்கள் ஏழு (7) வருடம் கற்பித்தல் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

அதிபர் சேவையில் ஐந்து வருட சேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

06. விசேட பதவியணி
(1) குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்குரிய ஆசிரியராக ஐந்து வருட தொடர்ச்சியான சேவைக் காலத்தைக் கொண்ட, பட்டதாரி தகைமையைக் கொண்ட ஆசிரியராக இருப்பதுடன் குறித்த பாடத்தில் கற்பித்தல் அனுபவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(2) குறித்துரைக்கப்பட்ட பாடத்திற்குரிய ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் அல்லது போதனாவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற ஆசிரியராக இருப்பின் ஏழு வருட கற்பித்தல் அனுபவத்தைக் கொண்டிருத்தல்.

ஆட்சேர்ப்பு முறை
ஆட்சேர்ப்புக்காக எழுத்துமூலப் பரீட்சை மற்றும் வாய்மொழி மூலப் பரீட்சை என்பன நடத்தப்படும். எழுத்துமூலப் பரீட்சைக்காக மூன்று வினாப் பத்திரங்களுக்கும் தோற்றி முறையே மூன்று வினாப் பத்திரங்களிலும் ஆகக் குறைந்தது 40 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

பாடங்கள்
(1) பொது அறிவும் நுண்ணறிவும் 1 மணித்தியாலமும் 30 நிமிடமும்
(2) ஒப்பீட்டுக் கல்வி 1 மணித்தியாலம்
(3) கல்வி நிருவாகமும் முகாமையும் 1 மணித்தியாலம்

பாடப் பரப்பு
(1) பொது அறிவும் நுண்ணறிவும் (பாட இலக்கம் 1)
– நுண்ணறிவு பரீட்சை வினாக்கள் மூலம் பரீட்சாத்தியின் தர்க்கிக்கும் ஆற்றலை மதிப்பிடல்.
– இலங்கையின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சூழல், வேலை செய்யும் சூழல், தேசிய சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள்.
– விஞ்ஞான தொழிநுட்ப அபிவிருத்தி தொடர்பாக பரீட்சாத்தியின் அறிவை சோதிப்பதற்கான பொது அறிவு வினாக்கள்.
இவை பல்தேர்வு மற்றும் குறுகிய விடை மாதிரியிலான 60 வினாக்களைக் கொண்டிருக்கும். சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

(2) ஒப்பீட்டுக் கல்வி (பாட இலக்கம் 2)
இலங்கை கல்விக் கொள்கை, கட்டமைப்புகள், அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டுள்ள விதம், அண்மைக் கால எழுச்சிகள், பிற நாடுகளின் முறைமைகள் தொடர்பிலான அறிவை ஒப்பீட்டளவில் மதிப்பீடு செய்தல் என்பவற்றுடன் சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

(3) கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்
கல்வி நிர்வாகம்: முகாமைத்துவத் துறையில் எழக்கூடிய ஒரு சில சம்பவங்களை முன்வைத்து, அச்சம்பவங்களுக்குப் பதிலளித்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் பரீட்சாத்தியின் அறிவு, ஆற்றலைப் பரீட்சிப்பதை நோக்காகக் கொண்டு வினாக்கள் முன்வைக்கப்படும். சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

வாய்மொழிப் பரீட்சை:
அரச சேவை ஆணைக்குழு நியமிக்கின்ற நேர்முகப் பரீட்சைக் குழுவினால் விண்ணப்பதாரிகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பான அறிவு, தர்க்கவலி பிரச்சினை தீர்த்தல், தொடர்பாடல் திறன் மற்றும் ஆளுமையைப் பரிசீலித்தல் தொடர்பான வாய்மொழிப் பரீட்சையொன்று நடத்தப்படும். அதில் வழங்கப்படும் உச்சப்புள்ளி 25 ஆகும்.

சேவை மூப்பு, திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்தல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் டிடிடி இன் பொது ஆளணிக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 இல் குறைந்த பட்சம் மூன்று வருட சேவைக் காலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். சேவை மூப்பு, திறமை அடிப்படையிலான ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு, மூன்று தடவைக்கு மேல் தோற்றுவதற்கு எந்தவொரு பரீட்சாத்திக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை மூப்பு திறமை அடிப்படையில் ஐந்து தடவைக்கு மேல் பரீட்சைக்குத் தோற்ற அனுமதியில்லை. அத்தோடு, இலங்கை அதிபர் சேவையில் பதவி நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைப் பொறுப்பேற்கும் இறுதித் திகதியன்று 55 வயதை விடக் கூடாது இருத்தல் வேண்டும்.

ஆட்சேர்ப்பு முறை
எழுத்துமூலப் பரீட்சைக்கான வினாத்தாள் இரண்டைக் கொண்டிருக்கும்.

பாடங்கள்
(1) ஒப்பீட்டுக் கல்வி நேரம் 1 மணித்தியாலம்
(2) கல்வி தொடர்பான சம்பவக் கற்கை நேரம் 1 மணித்தியாலம்

சேவை அனுபவம்
இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 இல் மூன்று வருடங்களுக்கு குறைந்தால் அதற்கு மேலதிகமாக 1 ஆம் தரத்தில் சேவையாற்றியுள்ள சேவைக் காலத்திற்கு ஒரு வருடத்திற்கு 5 புள்ளிகள் வீதம் உயர்த்தப்பட்டு 60 புள்ளிகள் சேவை அனுபவத்திற்கு வழங்கப்படும்.

0 Comments

Leave A Reply