10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

உயிரோட்டமாக பாலர்பகல்விடுதியை இயங்கச்செய்ய அனைவரும் இணைந்து உதவிசெய்வோமாக

IMG_0984நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியை உயிரோட்டமாக இயங்கச்செய்வதை ஊக்கப்படுத்துமுகமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது நீர்வேலி உறவுகளும் எமது ஊரினில் வசிப்பவர்களும் நதியுதவி செய்யவேண்டிய தேவையுள்ளது.பாலர்பகல்விடுதியில் கல்விபயிலும் மாணவர்களுக்கான உணவுக்காகவும் ஏனைய செலவுகளுக்காகவும் ஒருவர் ஆகக்குறைந்த தொகையாக Rs.2500 ரூபாவினை வழங்க முடியும்.எமது நீர்வேலி உறவுகளே உங்களின் பிறந்ததின நினைவாகவும் திருமணநாள் நினைவாகவும் மகிழ்வோடு உதவிபுரிந்து தியாகசிந்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல இறந்தவர்களின் நினைவாகவும் எமது மாணவர்களுக்காக உதவிபுரியமுடியும்.

உணவுக்கான செலவினை பணமாகவும் இதர அன்பளிப்பாகவும் வழங்க விரும்புபவர்கள் நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியை நிர்வகிக்கும் நிர்வாகத்திடம் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இலங்கை
திரு.செ.பத்மநாதன்- தலைவர் ( பாலர் பகல்விடுதி)   077 6589642

இலண்டன்

திரு.திருவாசகம்  07966580977

திரு.சுபேஸ்குமார்  07949234935

திரு.செல்வன் 07807784478.

 

இங்ஙனம்

நிர்வாகத்தினர்

( பாலர் பகல்விடுதி)

0 Comments

Leave A Reply