10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஊரவர்களை இணைக்கும் உறவுப் பாலத்திற்கு அகவை நான்கு.

hhhஉலகெங்கும் பரந்து வாழும் நீர்வை மக்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாக விளங்குவது நீர்வேலி இணையம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அங்கிருப்பவர் தனது ஊர்பற்றி வாஞ்சையுடன் அறிந்து கொள்வதற்கு நீர்வேலி இணையம் உதவி செய்கின்றது.
ஊரில் நிகழும் சமய நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி ஓர் ஊக்குவிப்பை மேற்கொள்கின்ற சேவையை நீர்வேலி இணையம் செவ்வனே ஆற்றி வருகின்றது.
ஊர்பற்றிய பிரக்ஞையுடன் செயற்படுவோர் நாடோறும் இத்தளத்திற்கு வருகை தருவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்த்தான் எங்கள் மண்ணுடன் தொடர்புடைய புலம்பெயர் இளஞ்சந்ததியினரை ஊருடன் இணைக்கவேண்டிய முக்கியத்துவமும் இன்று உணரப்படுகின்றது.

நீர்வேலி இணையம் ஆங்கிலப் பக்கம் ஒன்றை  உருவாக்க வேண்டும் என அதன் இயக்குநர்களிடம் வேண்டிக்கொள்கின்றேன். அது வாரத்தில் ஒருமுறை தரவேற்றம் செய்யப்பட்டாலும் பரவாயில்லை. புலம்பெயர் தேசத்தில் உள்ள ஆர்வலர்களுடனான ஒரு கூட்டு முயற்சியாக இதனை மேற்கொள்ளமுடியும் .
நீர்வை மண்ணின் தகவல் தொழினுட்ப அடையாளமாக விளங்கும் நீர்வேலி இணையம் தனது சேவைகளில் சிறந்தோங்க இனிய வாழ்த்துக்களை நவில்வதில் மகிழ்வடைகின்றேன்.
செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்
(நீர்வைக்கிழார்)
பிரதி அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை

0 Comments

Leave A Reply