10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

எங்கள் கணித ஆசானுக்கு மணிவிழா………..

sivaநீர்வேலியில் நீண்டகாலமாக கணிதம் கற்பித்து ஏராளமான மாணவர்களை உருவாக்கி தற்போது 08.01.2014 புதன்கிழமை ஆசிரியசேவையில் இருந்து ஓய்வு பெறும் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் முருகேசு சிவகுமாரன்  அவர்களுக்கு மணிவிழா புதன்கிழமை 08.01.2014 காலை 9.00 மணிக்கு கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு.கு.வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.இவர் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நீண்டகாலமாக கற்பித்து வந்ததுடன் அப்பாடசாலையின் புலமைப்பரிசில் பெறுபேறு மற்றும் ஏனைய கல்வி அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றிவந்ததுடன் உபஅதிபராகவும் இருந்து அதிபருக்கு உறுதுணையாகவும் இருந்து பாடசாலை அபிவிருத்தியிலும் முக்கிய பங்குவகித்திருந்தார்.நீர்வேலி தெற்கில் முன்னர் சிவராஜா மாஸ்ரரால் நடாத்திவந்த முத்து கல்விநிலையத்தில் (Pearl Institute) நீண்டகாலமாக கணிதம் கற்பித்து அனைத்து மாணவர்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம்பிடித்தவர்.ஓய்வு பெறும் காலத்தில் சகலவளங்களுடன் பல்லாண்டு வாழ மாணவர்கள் சார்பில் நாமும் வாழ்த்துகிறோம்.

ஆசிரியரின் தொடர்பு தொலைபேசி இல

0774115697

021 3205493

08.01

fg12-X-18---01-copy15-X-10---01-copy

8 Comments

 1. நான் உங்கள் மாணவன். பல வருடங்களுக்கு முன் எங்களுக்கு நீங்கள் விஞ்ஞானம் கற்பித்தீர்கள். உங்களை நாங்கள் குஞ்சு அண்ணா என்று அன்புடன் அழைப்போம், இன்றுதான் எனக்கு உங்கள் உண்மையான பெயரே தெரியும். காலங்கள் கழிந்துவிட்டன ஆனால் நீங்கள் கற்றுக் கொடுத்தவை அழியவில்லை! ஆசிரியச் சேவை மகத்தான சேவை அதில் நீங்கள் மணிவிழாக்காண்பது எம் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. உங்கள் நரைத்த முடிகளில் உங்கள் கற்பித்தலால் பயனடைந்து சிரித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். மணிவிழா பெருவிழாவாக அமையவும், உங்கள் ஓய்வுக்காலம் களிப்புடன் கழியவும் இறைவனை வேண்டி உங்களை மனமார வாழ்த்துகிறேன். என்றும் நன்றி மறவோம்.

  The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires.

  William Arthur Ward

  அன்புடன்

  கனகசபேசன் அகிலன்

 2. suren says: - reply

  முத்து கல்வி நிலையத்தில் விஞ்ஞான ஆசிரியராக பணி ஆற்றினார்

 3. எமது கிராமத்து மக்கள் குஞ்சு அண்ணா என்று அன்புடன் அழைப்பட்ட திரு. முருகேசு சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு மணிவிழா பெருவிழாவாக அமையவும், அவர்களை மனமார வாழ்த்துகிறேன். நன்றி.

 4. முருகேசு சிவகுமார் ( குஞ்சு மாஸ்டர் ) அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தபடுவதை இட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் கணித பாடம் மட்டுமில்லாமல் இரசாயன பாடம் கட்பிதலிலும் திறமை படைத்தவர். அவரின் பழைய மாணவன் மற்றும் உறவினன் என்ற வகையில் எனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்

 5. வாழ்த்த வயதில்லை! வாழ்த்தாமலிருக்கவும் மனதில்லை.!!
  ”குஞ்சு சேர்” ரின் ஆசிரியத்தொழிலினின்றான ஓய்வென்பது எமது பாடசாலைக்கும் மண்ணுக்கும் எத்தகையபெரு வெற்றிடமென்பதற்கு அவரது அத்தனை மாணவர்களதும் ஏக்கம் சாட்சியாகும். தாங்கள் பாடத்தில் எதனை சொல்லித்தந்தீர்கள் என தசாப்தங்கள் கடந்து எம்மால் நினைவில் வைக்க முடியாவிட்டாலும் நீங்கள் கற்றுத்தந்த ஏதோ ஒன்று எங்களை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறக்க முடியவில்லை சேர். பலர் கல்வித்துறையிலே ஆசிரியராக இருந்தாலும், உங்களைப்போன்ற ஒருசில நல்லாசான்களால் தான் ஒரு சமூகமே அங்கீகரிக்கும் அளவிற்கு அனைத்து மாணவ நெஞ்சங்களிலும் வாழ் நாள் ஆசிரியராக நிலைக்கமுடிகிறது. இதற்கு பட்டம் வேண்டாம், பதவி வேண்டாம்; உங்கள் மாணவர்கள், எங்களது இதயம் இடித்துச்சொல்கிறது- எத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கண்டு வந்தாலும்
  உங்களின் கடமையும் சேவையும் மெச்ச வைக்கிறது. வாழ்க நலமுடன்..!!!

 6. எனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்…!!!

 7. Vasuki says: - reply

  Dear Anna,Many Many Returns Of The Day.

 8. தற்செயலா இன்று பார்த்தேன். சிவராசா அண்ணையின்ரை டியூஷன் இல எங்களுக்கு சயின்ஸ் படிப்பித்தவர், அவருக்கு என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். குஞ்சண்ணை என்று கூப்புடுவம்.I wish you all the best

  I see Ahilan, Paran and Nithi annai also commented here. Nice to see you all.

  Sathees from Los Angeles, California

Leave A Reply