10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி எமது இணையத்திற்கு அகவை ஒன்று

imagesஎதிர்வரும்  டிசம்பர்  முதலாம்  திகதி  (01.12.2013)  எமது  புதிய  நீர்வேலி இணையத்திற்கு  அகவை  ஒன்று  ஆகும். கடந்த  வருடம்  டிசம்பர்  மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட newneervely.comஒருவருடத்தினை வெற்றிகரமாக  நிறைவுசெய்கிறது. ஆரம்பத்தில் எமது  நீர்வேலியைச் சேர்ந்த வாசகர்கள்  குறைவாகவே  இருந்தாலும்  காலப்போக்கில்  அதிகமான வாசகர்களைக்கொண்டு  இயங்கிவருகிறது. இவ்இணையம்  வெற்றிகரமாக வலம்வருவதற்கு  எம்முடன்  பல  அன்பர்கள்  பக்கதுணையாக  இருந்து ஆலோசனையும்  ஆக்கங்களையும்  வழங்கி  ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள். நீர்வேலியில் வதிகின்றவர்களும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் தினமும் எமது இணையத்தினை பார்வையிடுவதுடன் ஏனையவர்களுக்கும் இணையத்தினை பார்வையிட வழிப்படுத்திவருகின்றனர். இது எமது  நீர்வேலி  மீது அவர்களுக்கு உள்ள பற்றினாலாகும். அனைவருக்கும்  எமது  உளங்கனிந்த  நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.நீர்வளமும்  நிலவளமும் சூழ்ந்த எமது நீர்வேலி  கிராமத்தின் அருமை  பெருமைகளை தகவல்தொழில்நுட்பத்தின்  ஊடாக  நீர்வேலியை  சொந்த  இடமாகக் கொண்ட  அனைவருக்கும்  தெரியப்படுத்துவதுடன்  எல்லோரையும்  எல்லா  இடங்களையும்  எல்லா  நிகழ்வுகளையும் சமமாக  கருதி நீர்வேலியின் எந்தமூலையில் என்ன நிகழ்வு நடந்தாலும் அல்லது  நீர்வேலி சார்ந்த அனைத்து விடயங்களையும் அனைவரும் அறிந்துகொள்வதே எமது நோக்கமாகும்.  இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.

3 Comments

  1. A great website! I read it at least once a day, sometimes twice. Congratulations and well done to all involved.

    Thanks again for all your hard work.

    Ahilan

  2. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  3. Best wishes for your 1 st anniversary and your services to the community is very much appreciated.

Leave A Reply