10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

எத்தனை முறை குளித்தாலும் வழிந்தோடும் வியர்வை…..

தற்போது கொளுத்தும் வெயில் உடலில் எப்போதும் அசாதாரண நிலையையே உணரச் செய்கிறது.எத்தனை முறை குளித்தாலும் வழிந்தோடும் வியர்வை இந்த கோடை காலத்தில் எரிச்சலையே உண்டாக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் உடையை சரியாக தேர்ந்தெடுத்து உடுத்துவதன் மூலம் இந்த வியர்வை பிரச்சனையை போக்கி கோடையிலும் குளு குளு உணர்வை பெறலாம்.

வெயில் நேரத்தில் எப்போதும் இறுக்கமான உடைகளை அணியாமல், முடிந்த அளவு சற்று உடம்போடு அதிகம் ஒட்டாத உடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு காற்றோட்டோம் கிடைப்பதோடு வியர்வை தொல்லையும் இருக்காது.உள்ளாடைகளிலும் கவனம் செலுத்துவது முக்கியமானது.மெல்லிய உடைகள் வெயிலுக்கு இதமாக இருப்பதுடன் ஸ்டைலாகவும் இருக்கும்.செயற்கை துணிகளுக்கு பதிலாக பருத்தி ஆடைகளை அணியலாம். பாலியஸ்டர்அல்லது ரேயான் உடைகளை விட பருத்தி ஆடைகள் வியர்வையை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

அவ்வப்போது சூடான தண்ணீரில் குளியல் போடுங்கள், அடிக்கும் வெயிலுக்கு இது கொஞ்சம் ஓவர் தான். ஆனால் குளிர்ச்சியான தண்ணீரே உஷ்ணத்தை அதிகரிக்கும்.அதிக வேலைப்பாடு இல்லாத உடைகள் வெயிலுக்கு நல்லதாக இருக்கும். சிறிய உலோகங்கள், கண்ணாடி, மினுமினுக்கும் அழகு பொருட்கள் ஆகியவை உஷ்ணத்தை உண்டாக்கும்.வெயிலை சமாளிக்க ஒரு அதிக கணமில்லாத தொப்பியை கையிலும் ஒரு scarfயை பையிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

பெரிய தோள் பையை முதுகில் போட்டுக் கொண்டு போகாமல், சிம்மிளானசிறிய அளவு பையை பயன்படுத்தலாம். முதுகுப் பைகள் உடைகளை வியர்வையால் நனைத்து விடும்.வெறும் செருப்பு போட்டுக் கொண்டு வெயிலில் சுத்துவதை விட காலில் சாக்ஸ் போட்டு ஷு அணிந்து கொண்டால் குளிர்ச்சியான உணர்வை தரும்.

உங்களது கூந்தலை கழுத்தில் படாமல் scarf வைத்தோ, அல்லது முன்பக்கம் எடுத்தோ போட்டுக் கொள்ளுங்கள். இது கூந்தலால் உண்டாகும் வியர்வையை தடுக்க உதவும்.உடைகளை தவிர்த்து கழுத்தில் அணியும் நகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.நகைகள் உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

0 Comments

Leave A Reply