10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

என்றும் மரியாதைக்குரியவர் : ” புலவர் பார்வதி நாதசிவம் “

இன்று ஆசிரியர் தினம் :
நான் கல்வி பயின்ற ஆசிரியர்களிடம்
நான் பெற்றது ‘பண்பு’ என்பதன் அர்த்தம்.
அடுத்தே கல்வி, கேள்விகள்.
அந்த ஆசிரியர் வரிசையில் இன்று மனக்கண் முன் நிற்பவர் என்றும் மரியாதைக்குரியவர் :
” புலவர் பார்வதி நாதசிவம் ”
யாழ் மண்ணின் ஒரு தமிழ் இலக்கிய வாதி எனலாம்.
பல பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில்
இலக்கிய சுவைகளை வாசகர்களுடன்
பகிர்ந்து ஆதரவை பெற்றவர்.
அவரது மெல்லிய தோற்றம், தமிழ் தேசிய உடை, கழுத்தில் உத்தரம் அணியும் அழகு இவரது அழியா புன் சிரிப்பு
இவை இவரது சிறப்பு அடையாளம் .
என் சக மாணவர்கள் அவரை சிறு கேலியாக “சோழக காற்று வீசினால் என்ன செய்வீர்கள் ?” எனவினாவினால்
அவர் ” நான் நாணல் புல் ” என்பார்.

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு ”
பா திறம் அறிந்து பரிசு கொடு
( பிச்சை _ பரிசு )என பொருளுண்டு.
திறமையுடைய பாடல்களுக்கு தகுதியான வெகுமதி கொடு.

இதற்கு அவர் தந்த விளக்கம் அருமையானதும், எம்மை வசப்படுத்தியதாகும்.

எம்மை பல வழிகளிலும் தமிழை நேசிக்க கற்றுக் கொடுத்த அந்ந பெரும்தகையை
இன்று ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்வதில் பெருமை அடைகிறேன்.

அவரது ஒளிப்படம் எம் உள்ளத்தில்
மட்டுமே உள்ளது.
நடனம் _நீர்வை.

0 Comments