10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]என் அன்புத்தந்தையே………….. ![:]

[:ta]

எனக்கும் என் தந்தைக்குமிடையே பிரச்சினை தோன்றியது. இருவரும் சற்று உயர்ந்த தொணியில் பேசிவிட்டோம். அப்போது என்னிடமிருந்த சில குறிப்புத் துண்டுகளை மேசையில் எறிந்துவிட்டு துக்கமும் கவலையும் வாட்டி வதைக்க கட்டிலுக்குச் சென்றுவிட்டேன்.வழமையாக என்னை கவலை பீடிக்கும் போது தலையணையில் சாய்ந்து கொள்வேன்.அன்றைய தினமும் அப்படிச் சாய்ந்தாலும் தூக்கம் மிகத் தூரத்துக்கு தள்ளி நின்றது. மறுநாள் பல்கலைக்கழகம் சென்று திரும்பி வரும்போது அதன் வாயிலில் நின்றுகொண்டே கைத்தொலைபேசியை எடுத்து என் தந்தையை சாந்தப்படுத்த ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்.

” அன்புத் தந்தயே!
மனித பாதத்தின் கீழ்ப் பகுதி , மேற் பகுதியைவிட மிக மென்மையானது என கேள்விப் பட்டிருக்கிறேன் . இது உண்மைதானா என்பதை எனது உதடுகளால் பரீட்சித்துப் பார்க்க உங்கள் பாதங்களைத் தருவீர்களா?”

என்று கேட்டிருந்தேன்.

பின்பு வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றபோது வரவேற்பறையில் என் தந்தை அமர்ந்திருந்தார். அவரது இரு கன்னங்களையும் கண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தது.

“மகனே! நீ கூறியது போன்று எனது பாதங்களை முத்தமிட நான் அனுமதிக்க மாட்டேன். ஆனாலும் நீ எழுதியது உண்மைதான் . நீ மழலையாக இருக்கும்போது உனது பாதத்தின் கீழ்ப்பகுதி மேற்பகுதி என்று பாராது அவைகளை எனது உதடுகளால் முத்தமிட்டு அதனை தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

அவர் கூற எனது கண்களும் ஆறாய்ப் பெருகின.

சகோதரர்களே!

நமது இரட்சகனின் விதிப்படி என்றோ ஒரு நாள் இந்த உலகைப் பிரிவது உறுதி. அவர்களை நாம் இழப்பதற்கு முன்னராகவே நெருங்கி உறவாடுவோம்.

உங்களது பெற்றோர் உயிருடனிருந்தால் அவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள். அவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். அவர்கள் மரணமடைந்திருந்தால் அவர்களுக்காக அழுது இறைவனிடம் கேளுங்கள். அவர்களது விடயத்தில் கஞ்சத்தனம் காட்ட வேண்டாம்.

 

[:]

0 Comments

Leave A Reply