10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

எமது ஆங்கில இணையத்தளம்………

22எமது புதிய நீர்வேலி இணையத் தளத்தின் புதிய படைப்பாக ஆங்கில இணையத்தளம் ஒன்று அரம்பிக்கப்பட்டுள்ளது. எமது வாசகர்களின் வேண்டுகோளினை திருப்தி செய்வதற்காகவும் எமது ஆலோசனை சபையின் சிபார்சிலும் நீர்வேலி இணையத் தளத்தின் புதிய படைப்பாக ஆங்கில இணையத்தளம் இன்று வெளியிடப்படுகின்றது. இவ் ஆங்கில தளத்தில் வெளியிடுவதற்கு ஏற்ற விடயங்களையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்புங்கள். வெளிநாட்டில் வதியும் எமது உறவுகளின் பிள்ளைகள் தமிழினை வாசிக்கமுடியாதவர்களாக பலர் காணப்படுகின்றனர். அவர்களுக்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தளத்தினை உருவாக்க ஆலோசனை வழங்கிய கோப்பாய் அசிரியர் பயிற்சிக்கலாசாலை உப அதிபர் திரு.லலீசன் அவர்களுக்கு நன்றிகள். தொடர்ந்து வரும் நாளில் இரண்டு மொழிகளிலும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிடவுள்ளோம். அத்துடன் எமது இணையத்தின் நான்காம் ஆண்டு நிறைவினை வாழ்த்தி செய்திகளை அனுப்பிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக.https://newneervely.com/english/

ஆங்கில பக்கத்திற்கு செல்வதற்கு கீழேயுள்ள பொத்தனை போல உள்ள முன்பக்கத்தில் உள்ள பொத்தனை அழுத்துக

22

0 Comments

Leave A Reply