10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

எமது இணையத்திற்குரிய ஆலோசனைக்குழு

நீர்வேலியின்  சிறப்புக்களையும்  வரலாற்றினையும்  நாளாந்த  நிகழ்வுகள்  மற்றும் செய்திகளை எம் ஊரவர்கள் எங்கிருந்தாலும் அறிந்து கொள்ளும் முகமாக நியூநீர்வேலி இணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது சக்திக்கு அப்பாற்பட்டு இலவச சேவையினை செய்து வருகிறது. இச்சேவையினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பலர்  பக்கபலமாக இருந்து வருகின்றனர். அனைவருக்கும் இந்நாளில் நன்றிகள் உரித்தாகுக. அத்துடன் நியூநீர்வேலி இணையத்தினை மேலும் வளர்த்து நீர்வேலி மண்ணிற்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக ஆலோசனைக்குழு (Advisory Committee)  ஒன்று அமைக்குமாறு நீண்டநாட்களாக பலரால் ஆலோசனை கூறப்பட்டு வந்துள்ளது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலோசனைக்குழு ஒன்று  தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதில் பத்து உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

1)பிரம்மஸ்ரீ கு.தியாகராஜக்குருக்கள் (செல்லக்கதிர்காமதேவஸ்தானம் நீர்வேலி)

2) திரு.மா.திருவாசகம் (தலைவர் – நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன்)

3) திரு.ப.ஜெகன் (தலைவர் – நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா)

4) திரு,செ.பத்மநாதன் (தலைவர் – நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதி)

5)திரு.ச.லலீசன் (உபஅதிபர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)

6)திரு.சி.தயாபரன் (கிராம சேவையாளர் -நீர்வேலி தெற்கு)

7)திரு.இ.விசாகரூபன் (பல்வைத்திய நிபுணர் -பிரதேச  வைத்தியசாலை-சங்கானை)

8)திரு.வே.குணசீலன் (அதிபர் ஆரம்பப்பாடசாலை அச்சுவேலி)

9)திருமதி.வனஜா செல்வரட்ணம்

(பிரதம உதவிச்செயலாளர்-பிரதம செயலாளர் அலுவலகம்  -வடமாகாணம்)

10) திரு.சி.கௌரிசங்கர் (இளைப்பாறிய வடமகாண முகாமையாளர் -மத்திய வங்கி )

எமது இணையத்தில் வெளிவரும் செய்திகளிலும் தகவல்களிலும் ஏதாவது பிழைகள் பக்கச்சார்புக்ள் என்பன இருப்பின் மேற்படி ஆலோசனை சபையுடன் தொடர்பு கொள்ளும் போது சரியான விளக்கத்தினையும் உண்மை நிலையினையும் எடுத்துக்கூறுவர். இவ்வளவு காலமும் இயங்கிவந்ததைப்போல இனிவரும் காலங்களிலும் ஆலோசனை சபையின் வழிகாட்டலில் வெற்றிகரமாக நியூநீர்வேலி இணையம் இயங்கிக்கொண்டு இருக்கும்.  

                                                                                                            -நன்றி –

                                                                                                                                    -நியூநீர்வேலி இணையம்

 

2 Comments

  1. Jegan.p says: - reply

    தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்.
    ” newneervely.com” keep up the good work.
    Jegan. P

  2. Wish all your readers Happy & Prosperous New Year.

Leave A Reply