10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

எமது இணையத்திற்கு வாழ்த்துச்செய்திகள்…

12379688-1st-first-anniversary-celebrationஎமது  புதிய  நீர்வேலி  இணையம்  கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதி ஆரம்பித்தநாள்  முதல்  இன்று வரை ஊரில் உள்ள அன்பர்களும் வெளிநாட்டில் உள்ள  பலரும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருந்துவந்துள்ளனர்.அவர்களை இன் நாளில் நன்றியுடன்நினைவுகூர விரும்புகிறோம்.முதலில் எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்போமாக.அடுத்து எமது ஊரில் உள்ள படங்களையும் காணொளிகளையும் உடனுக்குடன் எடுத்து வழங்கும் இளைஞர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்.அந்தணச்சிவாச்சாரியர்களான சோமதேவக்குருக்கள் தியாகராஜக்குருக்கள் சுவாமிநாதக்குருக்கள் மயூரகிரிசர்மா அவர்களுக்கும் மற்றும் பாடசாலை அதிபர்களான திரு.செ.பத்மநாதன்  திரு.கு.வாகீசன் திரு.சி.தர்மரத்தினம் அவர்களுக்கும் கிராமசேவகர்களான  திரு.சி.தயாபரன் திரு.சு. சண்முகவடிவேல் திரு.S.பிறேசில்லா அவர்களுக்கும் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.குணநாதன் அவர்களுக்கும் விரிவுரையாளர் லலீசன் அவர்களுக்கும் இந்நாளில் எமது உளங்கனிந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.இவர்கள் வாழ்த்துச்செய்திகளை கோவில்கள் பாடசாலைகள் என்பவற்றிற்கு தடைதாமதமின்றி தந்துதவுபவர்கள்.அதுபோலவே எமது ஊரில் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பைச் சேர்ந்த திரு.ஜீவா அவர்களுக்கும் தற்போதய தலைவர் திரு ஜெகன் அவர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் பாலா அருணாசலம் அவர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள்.அதுபோலவே கனடாவில் வாழ்கின்ற திரு.குகேந்திரன் திரு.ரகு திரு.சிவதாசன் திரு.கண்ணன் அத்தியார் இந்து பழையமாணவர்சங்கம் மற்றும் இளையோர் அமைப்பு  போன்ற அனைவருக்கும் எமது நன்றிகள்.

                                            நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பில் தலமைவகிக்கும் திரு.திருவாசகம் மற்றும் பொருளாளர் திரு.சுபேஸ்குமார்  செயலாளர் திரு.செல்வநாதன் மற்றும் சிவகுமார் மற்றும் இலண்டனில் வதியும்  நீர்வேலி உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

அதுபோலவே ஏனைய நாடுகளில் வதியும் எமது இணையத்தனை தினமும் பார்வையிடுகின்ற எமது உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள்.ஓராண்டுப்பபூர்த்தியை முன்னிட்டு வாழ்த்துக்களை வாழ்த்துக்களை அனைத்து நெஞ்சங்களுக்கும் உளங்கனிந்த நன்றிகள்………………………….

……………………………………………………………………………………………..

s

………………………………………………………………………………………………………
969087_10151587032653022_1248537200_nநியூநீர்வேலி இணையம் தனது முதல் ஆண்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாவது அகவையில் கால்பதிப்பதையிட்டு மனமகிழ்வடைகின்றேன். அதனுடைய சேவை மேலோங்கி வளர, தொடர, அதன் ஆசிரியர் நீடூழி வாழ மனதார வாழ்த்துகின்றேன்.நீர்வேலி மண்ணையும்,நீர்வேலியிலிருந்துபுலம்பெயர்ந்து உலகளாவிய ரீதியில் வசிக்கின்ற நீர்வேலி மக்களையும் இணைக்கின்ற உறவுப் பாலமாகசெயற்பட்டு நீர்வேலியின் செய்திகளை உலகத்துக்கும், நீர்வேலி சார்ந்த உலகச் செய்திகளை எம் மண்ணிற்கும் எடுத்துச் செல்கின்ற பாரிய கடமையை செவ்வனே செய்வதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். நீர்வேலியின் தேவைகளை இணையத்தில் பதிவுசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவைகளை நிறைவேற்றுவதற்கு தங்களால் ஆன முயற்சிகளிலும் ஈடுபட்டு அவைகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும் ஈடேறஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்,இணைய வாசகன் ஜீவா

கனடா.

………………………………………………………………………………………………………………………..

Image-(5)
………………………………………………………………………………

Capturehhh

…………………………………………………………………
hhhhhhhhhhhhhhhhhhஉறவுப் பாலமாக என்றும் வாழ்க 

கிராமம் சார்ந்த இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் வாழும் உறவுகளைக் கிராமத்துடன் ஒன்றித்திருக்கச் செய்கின்றன. அந்த வகையில் நீர்வை மக்கள் யாவரையும் இணைக்கக்கூடிய வல்லமையுடன் புதிய நீர்வேலி இணையம் வளர்ச்சி பெற்று வருவது மகிழ்வைத் தருகின்றது. 

தகவல் தொடர்பாடல் அறிவு இன்று இலங்கையரில் 38 வீதமானவர்களையே சென்றடைந்துள்ளது. நீர்வேலியைப் பொறுத்தவரையில் இந்நிலைமை இன்னும் குறைவாக இருக்கலாம். ஆனால் வளர் இளம் சமூகம் இத்துறையில் இன்று ஆர்வம் எடுக்கின்றனர். முகப்புத்தகம் முதலிய சமூக இணையத்தளப் பயன்பாட்டில் பெரிதும் விருப்பம் காட்டுகின்றனர். 

நீர்வேலி இணையம் வழங்கும் செய்திகள் ஊடாக நீர்வைப் புதினங்களை புலம் பெயர் உறவுகள் மாத்திரமன்றி ஊரவர்களும் தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாகப் பாடசாலை நிகழ்வுகள், கோவில் நிகழ்வுகள் போன்றவையே இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்றன. இன்னும் கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர் போன்றோரது அறிவிப்புக்களையும் நீர்வேலி இணையம் உள்வாங்கிக்கொள்வது நலம். ஆண்டு நிறைவு காணும் நீர்வேலி இணையம் இன்னும் சிறப்புற்று மிளிர நல்வாழ்த்துக்கள். இதன் வளர்ச்சியில் மிக்க ஆர்வங்கொண்டு உழைக்கும் இணைய இயக்குநருக்கும் எனது பாராட்டுக்கள்.

நன்றி 

அன்புடன் 

நீர்வைக்கிழார்.

……………………………………………………………………………………………………………………………………

1372878_207398619433807_77908078_n

We are very pleased to extend our heartiest congratulations on the 1st anniversary of  Newneervely.com on the 1 st Nov 2013. During this 1st year all of us living thousands of miles away have been able to see hot hot photos and videos of events that happened throughout Neervely.  That is a great service to our community within and out of Neervely.
We would like to thank the organisers for their dedication and service, may this continue for years to come. Happy birthday and best wishes from all of us at Neervely welfare association Uk and Attiar hindu college old students association UK.
                                                                                                Thank you.
Regards
Mr.M.Thiruvasagam(UK)
…………………………………………………………………………………………………………………
ffff
டிசம்பர் 1ம் திகதி முதலாவது பிறந்த நாள் காணும் நீர்வேலி இணையத்திற்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேல் நாடுகளில் வசிப்பவர்கள் காலையில் எழும்புவதற்கு சேவல் கோழி கூவல் கிடையாது. காலையில் மிக அமைதியாக இருக்கும். யன்னல் ஊடாக வெளியில் பார்த்தால் வெள்ளை நிறமாக பனி படர்ந்து பனிக்காடாக காட்சியளிக்கும்.இந்த நிலையில் நெற்றில் நீர்வேலி இணையத்திற்கு சென்று தான் இயற்கையை பார்க்கமுடியும் என்ற உணர்வு தான் தினமும் ஏற்படுகின்றது. நீர்வேலி இணையம் மிகவும் சிறப்பாக எமது கிராமத்தின் அருமை பெருமைகளை தகவல் தொழில் நுட்பத்தின் ஊடாக தெரியப்படுத்துவதற்கு நன்றிகள். காலில் முள் தைக்கும் போது ஏற்படும் நோவை மூளை உணரவைக்கின்றது அது போன்று நீர்வேலி இணையம் எமது கிராமத்திலும் சரி வெளிநாடுகளிலும் சரி என்ன நிகழ்வு நடந்தாலும் புகைப்படங்கள்,வீடியோக்கள் மூலம் உணர்வை ஏற்படுத்துகின்றது நன்றிகள், வாழ்த்துக்கள் . நீர்வேலி இணையம் எமக்குகிடைத்த ஒரு மிகப்பெரிய கொடையாகும் ஏன் என்றால் எமது ஊரின் பெருமைகளை எந்த நேரமும் எந்த இடத்திலும் கை தொலை பேசியில் நண்பர்களுக்கு காட்டி பெருமைப்படமுடியும்.அப்போது அவர்கள் வியப்பு அடைந்து எங்கள் ஊரில் இப்படியான இணையத்தளம் இல்லை என்பார்கள். நீர்வேலி இணைத்தளம் மேலும் மேலும் சிறப்படைய வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
                                                                                                                   நன்றி.
அன்புடன்
பாலா அருணாசலம் (கனடா).
…………………………………………………………………………………………………………………………….
430801_103862886457129_498679906_n”newneervely.com”என்ற பெயருடன் இணையம் மூலமாக நீர்வேலி ஊரின் பல்வேறு நிகழ்வுகளையும் சிறப்புக்களையும் பெருமைகளையும் உலகறிய செய்துவரும் ”newneervely.com” 01.12.2013 தனது முதலாவது அகவையில் காலடி வைத்துள்ளமை மகிழ்வுக்குரியது .இந்தவகையில் தனது முதலாவது அகவையில் காலடி பதிக்கும் ”newneervely.com” க்கு எமது இதய பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் .மேலும் ”newneervely.com”இணையம் மூலம் இந்த சேவைகளும் பணிகளும் செய்து வரும்  ஆசிரியர் அவர்களின் பெரும் பணிகள் பாராட்டுக்குரியது .சேவைகளும் பணிகளும் தொடர எல்லாம் வல்ல இறைவரைப் பிராத்தித்து வாழ்த்துகின்றோம் , சுபம் .
அன்புடன்
சர்வதேச இந்துகலாச்சார அமைப்பு
கொழும்பு.
…………………………………………………………………………………………………………………………………..
Captureஉன்னை மறந்தாலல்லவோ நினைப்பதற்கு……………………………….
நான் லண்டனில் வாழ்ந்த காலம் நான் பிறந்த ஊரான நீர்வேலியில் வாழ்ந்த காலத்தைவிட அதிகம்.இதை நினைத்து நான் மகிழ்ந்த நாட்களை விட மனவருத்தப்பட்ட நாட்களே அதிகம். காலத்தின் செயற்பாடுகளும் என் கோழைத்தனமும் ஆங்கிலேய மண்ணில் என்னை அமர்த்திவிட்டன. திருப்பவும் ஆங்கிலேயனுக்கு அடிமை இல்லை என்பதில் சிறு சந்தோசம். திரும்பவும் எந்நாட்டிற்கு ஏன் போகக்கூடாது என்ற கேள்விக்கு பதில் தேடி இன்னும் பல வினாக்கள் என் மனதில்  எழுந்துகொண்டதுதான் மிச்சம். பல காரணங்களுக்காக வெளிநாடுகளில் வாழும் என்னைப்போன்றவர்களுக்கு இயலுமான இன்பத்தைத்தரும் ஊடகங்களிலும் இணையங்களிலும் ஒன்றுதான் நியூ நீர்வேலி இணையத்தளம். வெளிநாட்டிலும் ஊரிலும் நடக்கும் விடயங்களை தாமதமின்றி சுடச்சுட எமக்குத்தரும்  நியூ நீர்வேலி இணையத்தினரை பாராட்ட அகராதியில் வார்த்தைகள் கிடையாது. இப்படியான ஒரு இணையத்தை நிறுவி நாளாந்தம் பராமரித்து அதைசரிவர இயக்கிவருவது என்பது சாதாரன விடயம் கிடையாது. பெரும் உழைப்பும் நேரமும் இதற்கு செலவாகின்றது என்னைப்பொறுத்தவரையில் இவ்  இணையம் எனக்கு சொர்க்கத்தின் வாசல். இந்த வாசலைத்திறந்தலுடன் நான் பிறந்து தவழ்ந்து விழுந்து நடைபயின்று மகிழ்ந்து வாழ்ந்த மண் என் கண்முன் நிற்கும். இந்த இணையத்தால் என்னைப்போல் இன்பம் பெறும் அன்பர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். தயவு செய்து இந்த இணையத்தைப்பற்றிய உங்கள் அனுபவத்தையும் நீங்கள் நீர்வேலியில் வாழ்ந்த போது நடந்த சுவாரச்சியமான அனுபவங்களை மற்றவர்களோடு இவ் இணையம் மூலமாக பகிர்ந்துகொள்ளுங்கள். எமது ஊரையும் கடந்துபோன இனிவான நாட்களையும் நினைவுபடுத்தும் இந்த இணையத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் இணையத்தவரிடம் கூறுங்கள். இணையத்தினருக்கு எனது அன்பான வேண்டுகோள் பல்வேறான விடயங்களையும் செய்திகளையும் சிறுவர் பெரியவர் கவிதை கட்டுரைகளையும் இவ் இணையத்தில் பிரசுரிக்கவேண்டும்.  உங்கள் மகத்தான சேவை என்றும் தொடரவேண்டும். என உங்களை மனதார வாழ்த்தி பாராட்டி விடைபெறுகின்றேன்.
“Oh, London is a man’s town, there’s power in the air;
And Paris is a woman’s town, with flowers in her hair;
And it’s sweet to dream in Venice, and it’s great to study Rome;
But when it comes to living there is no place like Neervely,

and when it comes to websites there is no websites like NewNeervely. ” 
Thankyou.
Kanangasabesan  Ahilan
(London)
……………………………………………………………………………………………………………………………………….
newNeervely1st………………………………………………………………………..1472215_226827317494018_342871813_n………………………………………………………………………….
நியூ நீர்வேலி இணையத்திற்கு எனது வாழ்த்துக்கள்
இன்றுடன் தான் தொடங்கி ஒரு வயதினை நிறைவு செய்திருக்கின்ற எங்கள் அபிமானத்திற்குரிய நியு நீர்வேலி இணையத்திற்கு என்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்வடைகின்றேன். நீர்வேலிக் கிராமத்தினை உலகுடன் இணையச் செய்வதில் பெரும் பங்காற்றிவரும் இவ்விணையத் தளத்திற்கு எனது வாழ்த்துக்கள். இரண்டாவது அகவையில் காலடி வைக்கும் இவ்வேளையில் தனது பணிகளை மேலும் வலுவடையச் செய்து அனைவருக்கும் சிறந்த சேவையினை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். இவ்விணையத் தளத்தினை வெற்றிகரமாக இயக்கிவரும் சசிமாஸ்ரருக்கும் எனது வாழ்த்துக்கள்.கு.வாகீசன்
அதிபர்
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
நீர்வேலி.

 

4 Comments

 1. shajahan says: - reply

  தகவல் தொடர்பாடல் அறிவு இன்று இலங்கையரில் 38 வீதமானவர்களையே சென்றடைந்துள்ளது. நீர்வேலியைப் பொறுத்தவரையில் இந்நிலைமை இன்னும் குறைவாக இருக்கலாம். ஆனால் வளர் இளம் சமூகம் இத்துறையில் இன்று ஆர்வம் எடுக்கின்றனர். முகப்புத்தகம் முதலிய சமூக இணையத்தளப் பயன்பாட்டில் பெரிதும் விருப்பம் காட்டுகின்றனர்.

  நீர்வேலி இணையம் வழங்கும் செய்திகள் ஊடாக நீர்வைப் புதினங்களை புலம் பெயர் உறவுகள் மாத்திரமன்றி ஊரவர்களும் தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாகப் பாடசாலை நிகழ்வுகள், கோவில் நிகழ்வுகள் போன்றவையே இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்றன. இன்னும் கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர் போன்றோரது அறிவிப்புக்களையும் நீர்வேலி இணையம் உள்வாங்கிக்கொள்வது நலம். ஆண்டு நிறைவு காணும் நீர்வேலி இணையம் இன்னும் சிறப்புற்று மிளிர நல்வாழ்த்துக்கள். இதன் வளர்ச்சியில் மிக்க ஆர்வங்கொண்டு உழைக்கும் இணைய இயக்குநருக்கும் எனது பாராட்டுக்கள்.

  நன்றி

 2. neervely says: - reply

  மிக்க நன்றி

 3. காலமாற்றங்களிற்கேற்ப நாமும் மாறவேண்டிய கட்டாய நிலை இனறுள்ள்து.தகவல் தொடா்பாடல் இன்று கற்பனைக்காப்பால் வளா்ச்சி கண்டுள்ளது.இணையவளா்ச்சி இதனை சாத்தியமாக்கியுள்ளது.அதனை சிறப்பான முறையில் கையாண்டு மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து இன்று (01.12.2013) தனது முதலாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நீா்வேலி இணையத்திற்கு(www.newneervely.com)எனது வாழ்த்துக்களை தொிவிப்பதில் நீா்வேலி தெற்கு கிராம அலுவலா் என்ற முறையில் மனமகிழ்வடைகிறேன்.இன்னும் பல சிற்ப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு (கல்வி)மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

 4. Eelamranjan says: - reply

  நீர்வேலி இணையதளத்துக்கு எனது இனிய வாழ்த்துக்கள் சசி மாஸ்டர் உங்கள் சேவை மாபெரும் சேவை உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். ஈழம்ரஞ்சன் லண்டன்.

Leave A Reply