10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

எமது நீர்வேலி இணையத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தந்த வள்ளல்

எமது நீர்வேலி இணையத்திற்கு ஆரம்பகாலம் முதல் தற்போது இறக்கும் வரை மிகப்பெரிய ஆதரவாளராக காணப்பட்டு எங்களை ஊக்கப்படுத்தி வந்த திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டு சென்றமை பெருந்துயரமாகும். இலண்டனிலும் கனடாவிலும் உள்ள ஒரு சில மனநோய் பிடித்தவர்கள்   மதுபோதையிலும்  எம் இணையத்தளத்தினை பற்றியும் இதனை இயக்குபவர் பற்றியும்   அவதூறுகளை சதா எந்நேரமும் பரப்பி வரும் நிலையில் அமரர் சி.கணபதிப்பி்ளை போன்ற ஒரு சில உத்தமர்கள் யாருடைய பொய் வதந்திகளையும் நம்பாமல்  எம்மை இயக்கி வருகின்றார்களில் அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்கள்  ஒருவர். அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்களுடைய இழப்பு எங்களுக்கு ஈடுசெய்யமுடியாதது. இன்னொருவரால் அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்களுடைய இடத்தினை ஈடுசெய்யமுடியாது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் எனவும் நீர்வைக்கந்தனிடம் சரணாகதியடையவேண்டுமெனவும் இறைவனை வேண்டுகின்றோம்.

0 Comments

Leave A Reply